| நன்னூல் விருத்தியுரை |
வழிநூலும் சார்புநூலும் செய்வோர் பலர் குழீஇ, ஒருவர்க்கு ஒருவர் கூறும் கூற்றாக இச்சூத்திரம் செய்யப்பட்டது என்க. (9) |
| நூற்பயன் |
| {10} | அறம்பொரு ளின்பம்வீ டடைதனூற் பயனே. |
எ-னின், நாற்பொருட் பயன் என்றதனை (4) வகுத்து உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: அறமும் பொருளும் இன்பமும் வீடு அடைதலும் ஆகிய இந்நான்கும் நூல் தழுவப்படும் பயனாம் எ-று. வீடு என வாளா கூறாது, ‘வீடடைதல்’ என்றார் வீடு என்பது பேரின்பமாகிய சாத்தியம் ஆகலின். நான்கும் என்னும் செவ்வெண்ணின் (428) தொகையோடு முற்றும்மை21 விகாரத்தால் தொக்கன. (10) |
| மதம் ஏழு |
| 11. | எழுவகை மதமே யுடன்படன் மறுத்தல் பிறர்தம் மதமேற் கொண்டு களைவே தாஅ னாட்டித் தனாது நிறுப்பே இருவர் மாறுகோ ளொருதலை துணிவே பிறர்நூற் குற்றங் காட்ட லேனைப் பிறிதொடு படாஅன் றன்மதங் கொளலே. |
எ-னின், “எழுமதம்” (நூ. 4) என்றதனை வகுத்து உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: மேல் எழுவகை மதம் என்று சொல்லப்பட்டன. இங்ஙனம் பிறர் மதத்தை உடன்படல் முதலியவாக விதந்தனவாம் எ-று. நூல் தழுவிய மதங்கள் பல ஆயினும் தலைமை பற்றிய மதம் ஏழு என்பது நூல் வழக்காம் என்க. குற்றம் பத்து, அழகு பத்து, உத்தி முப்பத்திரண்டு என்பனவும் அன்ன. இவ்வெழு வகை மதங்கட்கும் பதப்பொருளோடு உதாரணம் விளங்க இந்நூலுள் வந்துழி வந்துழிக்22 காட்டுதும்; ஆங்காங்கு உணர்க. (11) |
| குற்றம் பத்து |
| {12} | குன்றக் கூறன் மிகைபடக் கூறல் |
------------------------------ 21“உம்மை விகாரத்தால் தொக்கன.” என்பது ஆறுமுக நாவலர் பாடம். 22காட்டிய இடங்கள்; நூ. 58, 91, 94, 95, 106, 128, 145. |