| நன்னூல் விருத்தியுரை | |
| ஒப்பின் முடித்தன் மாட்டெறிந் தொழுகல் இறந்தது விலக்க லெதிரது போற்றல் முன்மொழிந்து கோடல் பின்னது நிறுத்தல் விகற்பத்தின் முடித்தன் முடிந்தது முடித்தல் உரைத்து மென்ற லுரைத்தா மென்றல் ஒருதலை துணித லெடுத்துக் காட்டல் எடுத்த மொழியி னெய்த வைத்தல் இன்ன தல்ல திதுவென மொழிதல் எஞ்சிய சொல்லி னெய்தக் கூறல் பிறநூன் முடிந்தது தானுடன் படுதல் தன்குறி வழக்க மிகவெடுத் துரைத்தல் சொல்லின் முடிவி னப்பொருண் முடித்தல் ஒன்றின முடித்த றன்னின முடித்தல் உய்த்துணர வைப்பென வுத்தியெண் ணான்கே. | எ-னின்26 “எண்ணான் குத்தி” (நூ. 4) என்றதனை27 வகுத்து உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: முப்பத்திரண்டு உத்தியாவன நுதலிப் புகுதல் முதலியவாம் எ-று. இவற்றுள், ‘ஒன்றின முடித்த றன்னின முடித்தல்’ என்பது ஓர் உத்தி. ‘உய்த்துணர வைப்பு’ என்பதனை உத்திக்கு அடை. ஆக்கி, உய்த்துணர வைப்பெனு முத்தியெண்ணான்கே எனப் பாடம் ஓதி, அதனை இரண்டு உத்தி ஆக்கினும் அமையும். இவ்வுத்திகட்குப் பதப்பொருளோடு உதாரணம் விளங்க இந்நூலுள் வந்துழி வந்துழிக்28 காட்டுதும்; ஆங்காங்கு உணர்க. மதத்தினுள்ளும் அழகினுள்ளும் வருவன சிலவற்றை உத்தியுள்ளும் கூறியது என்னை எனின் கொள்கை வகையான் மதம் என்றும் சிறப்பு வகையான் அழகு என்றும் இம்மதம், அழகு முதலிய எல்லாம் புத்திநுட்பத்து அமையும் வகையான் உத்தி என்றும் கூறப்படும் என்க. அங்ஙனம் ஆயின் மதம், அழகு எல்லாவற்றையும் உத்தியின்பாற் ---------------------------- 26பாடலனார் உரை என்று யாப்பருங்கல விருத்தி (நூ. 95) எடுத்துக்காட்டும் நூற்பா ஒன்று இந்நூற்பாவுடன் பேரளவில் ஒத்துள்ளது. 27“முப்பத்திரண்டு உத்தி என்றதனை” என்பது ஆறுமுக நாவலர் பாடம். 28காட்டிய இடங்கள்: நூ. 56, 57, 58, 62, 67, 72, 90, 91, 94, 96, 97, 99, 100, 101, 102, 109, 124, 126, 132, 133, 135, 136, 137, 138, 140, 145, 158, 170, 171, 176, 188, 197, 209, 242, 243, 245, 248, 253, 281, 291, 315, 318, 334, 382, 399, 402 முதலியன. | |
|
|