| நன்னூல் விருத்தியுரை | எ-னின், இதுவும் அது. இ-ள்: மேற் கூறிய சூத்திரங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்ந்து நிற்கும் நிலைகள் ஆற்றொழுக்கு முதலிய நான்கினையும் போலும் எ-று. இவ்வாறு நிற்றல் இந்நூலுள் வந்துழி வந்துழிக்32 காட்டுதும்; ஆங்காங்கு உணர்க. (19) | | சூத்திரவகை
| | 20. | பிண்டந் தொகைவகை குறியே செய்கை கொண்டியல் புறனடைக் கூற்றன சூத்திரம். | எ-னின், இதுவும் அது. இ-ள்: பிண்டம் எனவும் தொகை எனவும் வகை எனவும் குறி எனவும் செய்கை எனவும் இவற்றை அலைவறக் கொண்டு, இவற்றின் புறத்து அடையாய் வரும் புறனடை எனவும் கூறும் கூற்றினை உடையவாம் மேற் கூறிய (18) சூத்திரங்கள் எ-று. இவற்றுள் பிண்டமாவன, “பன் னிருபாற் றதுவே” (நூ. 57) என்றல் தொடக்கத்துத் தொகை போலாது, “நன் கியம்புவ னெழுத்தே” (நூ. 56) என்றல் தொடக்கத்துப் பொதுப்பட வருவன. தொகையும் வகையும் புறனடையும் வந்துழி வந்துழிக்33 காட்டுதும்; ஆங்காங்கு உணர்க. விரி வகையின்பாற் படுதலின் கூறாராயினார். குறியாவன இவை உயிர் (63), இவை ஒற்று (63), இவை பெயர் (275), இவை வினை (320) என்றல் தொடக்கத்து அறிதல் மாத்திரையாய் வருவன. குறி என்பது அறிதலை உணர்த்திய முதனிலைத் தொழிற்பெயர். செய்கையாவன பதமுன் விகுதியும் பதமும் உருபும் புணரும் (243) புணர்ச்சிவிதி அறிந்து, அங்ஙனம் அறிதல் மாத்திரையாய் நில்லாது. அவ்வாறு வேண்டுழிப் புணர்த்தலைச் செய்தலும் பெயர், வினை முதலிய கொள்ளும் முடிபுவிதி அறிந்து, அங்ஙனம் அறிதல் மாத்திரையாய் நில்லாது, அவ்வாறு வேண்டுழி முடித்தலைச் செய்தலும் முதலியன. இப்பிண்டம் முதலிய ஆறு பெயரும் அப்பொருளை உணர்த்தும் சூத்திரங்கட்கு ஆகுபெயராய் வந்தன. எல்லாச் சூத்திரங்களும் பிண்டம், தொகை, வகை, புறனடை என்னும் நான்கனுள் அடங்கும் அன்றே? அங்ஙனம் ஆகக் குறியினையும் செய்கையினையும் வேறு ஓதியது ---------------------------------- 32காட்டிய இடங்கள்; நூ. 96, 101, 109 முதலியன. 33காட்டிய இடங்களில் சில: நூ. 57, 75, 127, 239, 257, 282, 283, 305, 322, 343, 444, 460, 462. | |
|
|