| நன்னூல் விருத்தியுரை | எல்லா நூலுள்ளும் சொல்லப்படுவன அறிவதும் செய்வதும் அன்றி வேறு இன்மையின் பிண்டம் ஆக்கியும் தொகுத்தும் வகுத்தும் புறத்து அடை கொடுத்தும் கூறப்படுவன குறியும் செய்கையுமே என்பது தோன்றற்கு என்க. இங்ஙனம் கூறவே எல்லா நூலுள்ளும் வரும் எல்லாச் சூத்திரங்களும்34 குறிச்சூத்திரம், செய்கைச்சூத்திரம் என இரண்டாய் அடங்கும் என்பது பெற்றாம். இவ்வாறன்றிக், ‘குறி’ என்பதற்குப் பெயர்களை உணர்த்தும் சூத்திரம் என்றும், ‘செய்கை’ என்பதற்கு எழுத்துப் புணர்ச்சியை உணர்த்தும் சூத்திரம் என்றும் பொருள் கூறுவாரும் உளர். அங்ஙனம் கூறின் ஏனை இலக்கணங்களைக் கூறும் சூத்திரங்களையும் விதந்து கூற வேண்டும். அவை இன்மையானும் பெயரும் புணர்ச்சியும் இவ்விலக்கண நூற்கு அன்றிப் பொதுப் பாயிரமாய் எல்லா நூற்கும் பொருந்தாமையானும் அது பொருள் அன்று என்க. (20) | | உரையின் பொது இலக்கணம்
| | 21. | பாடங் கருத்தே சொல்வகை சொற்பொருள் தொகுத்துரை யுதாரணம் வினாவிடை விசேடம் விரிவதி காரந் துணிவு பயனோ டாசிரிய வசனமென் றீரே ழுரையே. | எ-னின், மேல் (4) காண்டிகையுரை, விருத்தியுரை என்றார்; அவற்றை உணர்த்துவான் தொடங்கி, உரையினது பொது இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: இப்பதினான்கு வகையான்35 உரைக்கப்படும் நூற்கு உரை எ-று. இவற்றுள் விசேடமாவது: சூத்திரத்துட்பொருளன்றி ஆண்டைக்கு வேண்டுவன தந்துரைத்தல், விரிவாவது: வேற்றுமை முதலிய தொக்கு நின்றனவற்றை விரிக்க ------------------------------- 34பெயர்ச்சூத்திரம், விதிச்சூத்திரம், விலக்கியற்சூத்திரம், நியமச்சூத்திரம், அதிகாரச்சூத்திரம், ஞாபகச்சூத்திரம் என்று யாப்பருங்கல விருத்தி (பாயி.) சூத்திரங்களை வகைப்படுத்தும். 35யாப்பருங்கல விருத்தி, | | | “முத்திறத் தானு மூவிரு விகற்பினும் பத்து விதத்தானும் பதின்மூன்று திறத்தானும் எழுவகை யானு மிரண்டுகூற் றானும் வழுவுநனி நீங்க மாண்பொடு மதத்தொடும் யாப்புறுத் துரைப்பது சூத்திர உரையே” | என்னும் மேற்கோள் நூற்பாவைக் காட்டி (பாயி.) உரைப் பகுதிகள் பற்றிய வெவ்வேறு கோட்பாடுகளைக் குறிப்பிடும். வீரசோழிய உரை (நூ. 178) சுட்டும் உரைவகை பதினான்கிற்கும் பவணந்தி முனிவர் கூறும் பதினான்கு வகைக்கும் சிறிய வேறுபாடு உண்டு. இச்செய்திகளை எல்லாம் மயிலைநாதர் (நன். 20) தொகுத்துக் கூறுவார். | |
|
|