| நன்னூல் விருத்தியுரை |
‘சூத்திரத் துட்பொரு ளன்றியும்’ என்றமையான் மேற் கூறிய (21) பதினான்கு உறுப்பும் கொண்டது38 விருத்தியுரை என்பது பெற்றாம். (23) |
| நூலின் பெயர்க்காரணம்
|
| 24. | பஞ்சிதன் சொல்லாப் பனுவ லிழையாகச் செஞ்சொற் புலவனே சேயிழையா - வெஞ்சாத கையேவா யாகக் கதிரே மதியாக மையிலா நூன்முடியு மாறு. |
எ-னின், நூல் என்னும் பெயர் வருமாறு39 உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: இந்த நூல் முடியுமாறு இது ஆதலின் நூல் என்றது உவமவாகுபெயராம் எ-று. (24) |
| நூலின் மாண்பு |
| 25. | உரத்தின் வளம்பெருக்கி யுள்ளிய தீமைப் புரத்தின் வளமுருக்கிப் பொல்லா - மரத்தின் கனக்கொட்டந் தீர்க்குநூ லஃதேபோன் மாந்தர் மனக்கோட்டந் தீர்க்குநூன் மாண்பு. |
எ-னின், இதுவும் அது. இ-ள்: அந்நூல்போல் செப்பம் செய்தலானும் நூல் என்றது உவமவாகுபெயராம் எ-று. புரத்தினது உரத்தின் வளம் பெருக்கி உள்ளிய தீமைவளம் முருக்கி எனக் கூட்டுக. புரம்- உடம்பு; உரம்- நெஞ்சு. பின்பு தீமைவளம் என்றமையான் முன்பு நல்வளம் எனத் தந்துரைக்க நல்வளம்-அறிவு; தீமைவளம்- அறியாமை. (25) ----------------------------------- 38இவ்வுரையை மறுத்து, “ஐங்காண்டிகை உறுப்போடு என்றதினால ஐங்காண்டிகை உறுப்பின் மேற்பட்டு வருவன எல்லாம் விருத்தியுரை” என்று இராமாநுச கவிராயர (நன். 23) விளக்குவார். 39“நூல் போறலின் நூல் என்பன பாவை போல்வாளைப் பாவை என்றாற்போல.” என்று இறையனார் அகப்பொருள் உரையும் (இறை. 1) யாப்பருங்கல விருத்தியும் (பாயி.) நூலின் பெயர்க்காரணத்தை விளக்கும். |