| நன்னூல் விருத்தியுரை |
| பருத்திக்குண்டிகையின் தன்மை |
| 34. | அரிதிற் பெயக்கொண் டப்பொரு டான்பிறர்க் கெளிதீ வில்லது பருத்திக் குண்டிகை. |
எ-னின், இதுவும் அது. இ-ள்: பருத்தி பெய்த குண்டிகையின் குற்றம் இது ஆதலின் இஃது உவமை ஆயிற்று எ-று. (34) |
| முடத்தெங்கின் தன்மை
|
| 35. | பல்வகை யுதவி வழிபடு பண்பின் அல்லோர்க் களிக்கு மதுமுடத் தெங்கே. |
எ-னின், இதுவும் அது. இ-ள்: முடத்தெங்கினது குற்றம் இது ஆதலின் இஃது உவமை ஆயிற்று எ-று. இவ்வுவமைகளின் குற்றம்போலப் பொருளின் குற்றமும் விரித்து உரைத்துக்கொள்க. (35) |
| கற்பித்தலின் வரலாறு |
| 36. | ஈத லியல்பே யியம்புங் காலைக் காலமு மிடனும் வாலிதி னோக்கிச் சிறந்துழி யிருந்துதன் றெய்வம் வாழ்த்தி உரைக்கப் படும்பொரு ளுள்ளத் தமைத்து விரையான் வெகுளான் விரும்பி முகமலர்ந்து கொள்வோன் கொள்வகை யறிந்தவ னுளங்கொளக் கோட்டமின் மனத்தினூல் கொடுத்த லென்ப. |
எ-னின், நிறுத்த முறையானே (3) ஆசிரியன் கற்பிக்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: கற்பிக்குமாறு இவ்வாறு எனச் சொல்லுவார் புலவர் எ-று. (36) |
| மாணாக்கன் வரலாறு |
| 37. | தன்மக னாசான் மகனே மன்மகன் பொருணனி கொடுப்போன் வழிபடு வோனே உரைகோ ளாளற் குரைப்பது நூலே. |
எ-னின், நிறுத்த முறையானே (3) மாணாக்கனது வரலாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: இவ்வறுவர்க்கும் சொல்லப்படுவது நூல் எ-று. |