| நன்னூல் விருத்தியுரை | | 48. | காலங் களனே காரண மென்றிம் மூவகை யேற்றி மொழிநரு முளரே. | எ-னின், இதுவும் அது. இ-ள்: அவ்வெட்டனோடு (47); இம்மூன்றனையும் கூட்டிப் பதினொன்றாகக் கூறுவாரும் உளர் எ-று. (48) | | நூற்பெயர் | | {{49}} | முதனூல் கருத்த னளவு மிகுதி பொருள்செய் வித்தோன் றன்மைமுத னிமித்தினும் இடுகுறி யானுநூற் கெய்தும் பெயரே. | எ-னின், மேற்கூறிய (47, 48) பதினொன்றனுள் நூற்பெயர்க்குச் சிறப்புவிதி உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: முதல்நூல் முதல் தன்மை ஈறாகக் கூறிய ஏழும் பிறவும் ஆகிய காரணங்களானும் இடுகுறியானும் நூற்குப் பெயர் வரும் எ-று. வ-று: முதல் நூலால் பெயர் பெற்றன ஆரியப்படலம், பாரதம் முதலாயின. கருத்தனால் பெயர் பெற்றன அகத்தியம், தொல்காப்பியம்41 முதலாயின. அளவினால் பெயர் பெற்றன பன்னிருபடலம், நாலடி நானூறு முதலாயின. மிகுதியால் பெயர் பெற்றன களவியல் முதலாயின. பொருளால் பெயர் பெற்றன அகப்பொருள் முதலாயின. செய்வித்தோனால் பெயர் பெற்றன சாதவாகனம் முதலாயின. தன்மையால் பெயர பெற்றன சிந்தாமணி, நன்னூல் முதலாயின. இடுகுறியால் பெயர் பெற்றன நிகண்டு, கலைக்கோட்டுத் தண்டு முதலாயின, பிறவும் அன்ன. (49) | | நூல்யாப்பு | | {50} | தொகுத்தல் விரித்த றொகைவிரி மொழிபெயர்ப் பெனத்தகு நூல்யாப் பீரிரண் டென்ப. | எ-னின், வாய்ப்பக் காட்டல் (15) என்பதனால் போந்த சிறப்பு இல்லனவற்றுள் வழியின் வகை இத்துணையாம் என உணர்த்துதல்42 நுதலிற்று. இ-ள்: நூல் யாக்கப்படும் யாப்பு தொகுத்து யாக்கப்படுவதூஉம் விரித்து யாக்கப்படுவதூஉம் தொகுத்தும் விரித்தும் யாக்கப்படுவதூஉம் மொழி- ------------------------------- 41இறையனார் அகப்பொருள் உரை (இறை. 1) செய்தான், செய்வித்தான், இடுகுறி,அளவு, சிறப்பு என்னும் ஐந்து காரணங்களால் நூற்பெயர் அமையும் என்று கூறும். 42இந்நூற்பாவின் உரைக்குச் சிவஞான முனிவர் செய்த திருத்தம் ஆறுமுக நாவலர் பதிப்புகளில் வேறு வகையாகக் காணப்படுகிறது. | |
|
|