| நன்னூல் விருத்தியுரை |
பெயர்த்து யாக்கப்படுவதூஉம் என்று சொல்லத் தகும் இந்நான்கு கூற்றதாம் என்று சொல்லுவர் புலவர் எ-று. மேற் கூறிய (47, 48) பதினொன்றனுள் ஒன்றாகிய யாப்பினோடும் வெண்பா முதலிய43 யாப்பினோடும் இவற்றினுக்கு வேற்றுமை தோன்ற, ‘எனத்தகு நூல்யாப்பு’ என்றார். சிறப்பு இல்லனவற்றுள் வழியின் வகை ஒன்றனையும் எடுத்து ஓதியது என்னை எனின் இந்நூல் தொகைவிரிப்பட யாத்தமை தோன்றற்கு என்க. இவ்வாறே ஆசிரியர் தொல்காப்பியரும்,, |
| | “வழியின் நெறியே நால்வகைத் தாகும்” (தொல். மரபு. 98) “தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த் ததற்பட யாத்தலோ டனைமர பினவே” (தொல். மரபு. 99) |
என எடுத்து ஓதுமாறும் காண்க. (50) |
| சிறப்புப் பாயிரம் செய்தற்கு உரியார் |
| 51. | தன்னா சிரியன் றன்னொடு கற்றோன் தன்மா ணாக்கன் றகுமுரை காரனென் றின்னோர் பாயிர மியம்புதல் கடனே. |
எ-னின், இவ்விலக்கணங்களை (47, 48) உடைய சிறப்புப் பாயிரம் கூறுதற்கு உரியார் இவர் என உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: ஒருவன் கூறிய நூற்கு இந்நால்வருள் ஒருவர் சிறப்புப் பாயிரம் கூறுதல் முறைமையாம் எ-று. (51) |
| சிறப்புப் பாயிரம் பிறர் செய்தற்குக் காரணம் |
| 52. | தோன்றா தோற்றித் துறைபல முடிப்பினுந் தான்றற் புகழ்த றகுதி யன்றே. |
எ-னின்44 சிறப்புப் பாயிரம் பிறர் கூறுதற்குக் காரணம் உணர்த்துதல் நுதலிற்று. ----------------------------- 43வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா என்று பா நான்கு வகைப்படும். 44இந்நூற்பாவையும் இதற்கு அடுத்த நூற்பாவையும் பனம்பாரம் என்று மயிலைநாதர் (நன். 52) கூறுவார். |