பக்கம் எண் : 142
  

நன்னூல் விருத்தியுரை
 

     எ-னின், மேல், “பாயிர மில்லது பனுவ லன்று” (நூ.54) என்றார்; அஃது அன்று
ஆதற்குக் காரணம் உணர்த்துதல் நுதலிற்று.

     இ-ள்: அறிவுடையோர் மாடம் முதலிய மூன்றற்கும் சித்திரம் முதலிய மூன்றும்
போலக் கருதி, அழகிதாகிய பொருளை உணர்த்தாநின்ற இருவகைப் பாயிரங்களையும்
உரைத்து, எவ்வகைப்பட்ட பெரிய நூல்கட்கும் முன்னர்ப் பெய்துவைத்தார
 பெரும்பாலும். ஆதலின், “பாயிர மில்லது பனுவல்” (நூ. 54) அன்றாம் எ-று. (55)
 

பொதுப் பாயிரம் முற்றிற்று