பக்கம் எண் : 143
  

முதலாவது
 

எழுத்ததிகாரம்
 

     {00} அதிகாரத் தோற்றுவாய்

     <எழுத்ததிகாரம்46 என்பது எழுத்தினது அதிகாரத்தை உடையது என அன்மொழித்தொகையாய் அப்படலத்திற்குக் காரணக்குறி ஆயிற்று.

     எழுத்து என்றது, “அகரமுத னகர விறுவாய்”க்
(தொல். நூன். 1) கிடந்த முதலெழுத்து முப்பதும் உயிர்மெய் முதலிய சார்பெழுத்துப் பத்தும் ஆம். அவற்றிற்கு எழுத்து என்னும் குறி, “மொழிமுதற் காரணம்” (நூ. 58) என்னும் சூத்திரத்தால் ஓதுப ஆகலின் ஈண்டு போற்றி ஆளப்பட்டது.

     அதிகாரம்- அதிகரித்தல். அஃது இருவகைப்படும். அவற்றுள் ஒன்று, வேந்தன் இருந்துழி இருந்து தன் நிலம் முழுவதும் தன் ஆணையின் நடப்பச் செய்வதுபோல ஒரு சொல் நின்றுழி நின்று பல சூத்திரங்களும் பல ஓத்துக்களும் தன் பொருளே நுதலி வரச் செய்வது. ஒன்று, சென்று நடாத்தும் தண்டத் தலைவர்போல ஓர் இடத்து நின்ற சொல் பல சூத்திரங்களோடும் சென்று இயைந்து, தன் பொருளைப் பயப்பிப்பது. இவற்றிற்கு முறையே வடநூலார் யதோத்தேச பக்கம் எனவும் காரியகால பக்கம் எனவும் கூறுப. இது சேனாவரையர் உரையானும்
(தொல். கிளவி. 1) உணர்க. அவற்றுள் ஈண்டு அதிகாரம் என்றது முன்னையது. அதனை உடையது எனவே எழுத்தை நுதலி வரும் பல ஓத்தினது தொகுதி எழுத்ததிகாரம் என்றவாறு ஆயிற்று.

     எழுத்தினது அதிகாரத்தை உடையது என்புழி ஆறாவது வினைமுதற் பொருண்மையின்கண் வந்த காரகம்.

     இப்படலத்துள் விதிக்கப்படுவன எல்லாம் கருவியும் செய்கையும் என இருவகைப்படும். அவற்றுள் கருவி எழுத்தியல், பதவியல் என்னும் இரண்டு
-------------------------------
     46தொல்காப்பியச் சூத்திர விருத்தி (பக். 31-32).