பக்கம் எண் : 144
  

நன்னூல் விருத்தியுரை
 

    
ஓத்தானும் செய்கை உயிரீற்றுப் புணரியல் முதலிய மூன்று ஓத்தானும் கூறப்படும். கருவி பொதுவும் சிறப்பும் என47 இருவகைத்து.> முதல் இரண்டு ஓத்தினும் கூறப்படுவன பொதுக்கருவி. உயிரீற்றுப் புணரியல் முதற்கண் புணர்ச்சி இன்னது எனக் கூறப்படுவனவும் (151-154) உருபு புணரியலின் இறுதிக்கண் சாரியைத் தோற்றம் கூறப்படுவனவும் (253) செய்கை ஒன்றற்கே உரிய கருவி ஆகலின் சிறப்புக்கருவி.

------------------------------
     47எழுத்ததிகாரத்தில் சொல்லப்படுவன எல்லாம் கருவியும் செய்கையும் என இருவகைப்படும் என்றும் அவை முறையே புறப்புறக்கருவி, புறக்கருவி, அகப்புறக்கருவி, அகக்கருவி எனவும் புறப்புறச்செய்கை, புறச்செய்கை,
அகப்புறச்செய்கை, அகச்செய்கை எனவும் நந்நான்கு வகைப்படும் என்றும்
இளம்பூரணர் (தொல். எ. தோற்றுவாய்) பாகுபாடு செய்வார். இதனை
நச்சினார்க்கினியரும் (தொல். நூன். 1) வைத்தியநாத தேசிகரும் (இல. விள. 158)
தழுவிக்கொள்வர்.
     சிவஞான முனிவர் இப்பாகுபாட்டின் முதற்பகுதியை மட்டுமே
ஏற்றுக்கொள்வார்; இதன் பிற்பகுதியை மறுத்துவிட்டு, வேறு பாகுபாட்டை
ஈண்டுக் கூறுகிறார். இக்கருத்தைத் தொல்காப்பியச் சூத்திர விருத்தியிலும் (பக்.
32) இலக்கண விளக்கச் சூறாவளியிலும் (பக். 109) காணலாம்.
     பவணந்தி முனிவர் கூறிய எழுத்திலக்கணத்தின் பன்னிரு பகுதிகளையும்
(நன். 57) சங்கர நமச்சிவாயர் (நன். 58) எழுத்தின் அகத்திலக்கணம்,
புறத்திலக்கணம் என்று இருவகையாகப் பாகுபாடு செய்வார்.