பக்கம் எண் : 147
  

நன்னூல் விருத்தியுரை
 

     முற்கு, வீளை முதலியவற்றிற்கு முதற்காரணமாய், அணுத்திரளின் காரியமாய்
வரும் ஒலி எழுத்து ஆகாமையின் மொழி முதற்காரணம் ஆம் ஒலி என்றார். சிதலது
நீர்வாய்ச் சிறுதுகளால் பெரும்புற்றுரு அமைந்த பெற்றியதென்ன ஐம்புலப் பேருரு
ஐந்தும் ஐந்து அணுவால் இம்பரிற் சமைவது யாவரும் அறிதலின் அநாதிகாரணமாகிய
மாயையினை ஈண்டுக் கூறாது, ஆதிகாரணமாகிய செவிப்புலன் ஆம் அணுத்திரளை
எழுத்திற்கு முதற்காரணம் என்றார். இவ்வாசிரியர்க்கு மாயை உடன்பாடு அன்று;
அணுத்திரள் ஒன்றுமே துணிவு எனின் பிறிதொடு படாஅன் தன் மதம் கொளல்
என்னும் மதம்படக் கூறினார் என்று உணர்க. ஈண்டு அணு என்றது ஒலியினது
நுட்பத்தை. (3)
 

முதலெழுத்தின் விரி
 

59.

உயிரு முடம்புமா முப்பது முதலே.
 
     எ-னின், முதலெழுத்தின் விரி52 உணர்த்துதல் நுதலிற்று.

     இ-ள்: உயிரும் உடம்பும் ஆகும் முப்பது எழுத்தும் முதலெழுத்தாம் எ-று. (4)
 

சார்பெழுத்தின் தொகை
 

{60} 

உயிர்மெய் யாய்த முயிரள பொற்றள
பஃகிய இஉ ஐஒள மஃகான்
தனிநிலை பத்துஞ் சார்பெழுத் தாகும்.
 
     எ-னின், சார்பெழுத்தின் விரி உணர்த்துதல் நுதலிற்று.

     இ-ள்: இப்பத்தும் சார்பெழுத்து ஆம் எ-று.

     அஃகுதல்-சுருங்குதல். தனிநிலை-ஆய்தம். உயிர்களோடும் மெய்களோடும்
கூடியும் கூடாதும் அலிபோலத் தனி நிற்றலின் தனிநிலை எனப்படும்.

     உயிர்மெய் உயிரும் மெய்யும் கூடிப் பிறத்தலானும் ஆய்தம் உயிர்போல,

     “அற்றா லளவறிந் துண்க வஃதுடம்பு
      பெற்றா னெடிதுய்க்கு மாறு” (குறள். 943)

என அலகு பெற்றும் மெய்போலத்,
------------------------------------
     52மயிலைநாதர் (நன். 58), “முதலெழுத்து எனத் தொகையான் ஒன்றும்
உயிரெழுத்து, உடம்பெழுத்து என வகையான் இரண்டும் உயிர் பன்னிரண்டும் உடம்பு பதினெட்டும் என்று வகுத்துக் கூட்ட, விரியான் முப்பதும் ஆம்.” என்று விரித்துக் கூறுவார். இவ்வாறே சார்பெழுத்துக்களின் விரியையும் அவர் (நன். 60) விளக்கிக் கூறுவார்.