| நன்னூல் விருத்தியுரை |
யானும் அவ்வங்காப்போடு அண்பல் அடிநா விளிம்பு உறக் கூறும் முயற்சியானும் அவ்வங்காப்போடு இதழ் குவித்துக் கூறும் முயற்சியானும் பிறத்தலான் அப்பிறப்பிடத்து முறையே முறையாக வைக்கப்பட்டன. ஆகார ஈகார ஊகாரங்கள் அகரம் முதலியவற்றிற்கு இனம் ஆதலின் அவற்றைச் சார வைக்கப்பட்டன.> <இனி எகரமாவது62 அகரக்கூறும் இகரக்கூறும் தம்முள் ஒத்து இசைத்து, நரமடங்கல்போல் நிற்பதொன்று ஆகலானும் ஒகரமாவது அகரக்கூறும் உகரக்கூறும் தம்முள் ஒத்து இசைத்து, அவ்வாறு நிற்பதொன்று ஆகலானும் அவை அவற்றின் பின் முறையே வைக்கப்பட்டன. ஏகார ஓகாரங்கள் இனம் ஆதலின் அவற்றின் பின் முறையே வைக்கப்பட்டன. அகரமும் யகரமும் இகரமும் தம்முள் ஒத்து இசைத்து நிற்பதொன்று ஆகலின் எகர ஏகாரங்களின் பின்னர் ஐகாரமும், அகரமும் வகரமும் உகரமும் தம்முள் ஒத்து இசைத்து நிற்பதொன்று ஆகலின் ஒகர ஓகாரங்களின் பின்னர் ஒளகாரமும் வைக்கப்பட்டன. இவ்வாறு ஆதல்பற்றி ஏ, ஓ, ஐ, ஒள என்னும் நான்கனையும் வடநூலார் சந்தியக்கரம் என்பர். கையடனார்63 நரமடங்கல்போல என்று உவமையும் கூறினார். > இக்கருத்தே பற்றி ஆசிரியர், |
| | “அம்மு னிகரம் யகர மென்றிவை எய்தி னையொத் திசைக்கு மவ்வோ டுவ்வும் வவ்வும் மௌவோ ரன்ன” | (நன். 125) |
என்றார். இவ்வாறே <ஆசிரியர்64 தொல்காப்பியரும், |
| | “அகர விகர மைகார மாகும்” “அகர வுகர மௌகார மாகும்” | (தொல். மொழி. 21) (தொல். மொழி. 22) |
எனக் கூறி, ஐ என்னும் நெட்டெழுத்தின் வடிவு புலப்படுத்தற்கு அகர இகரங்களே அன்றி அவற்றிடையே யகரமும் ஒத்து இசைக்கும் என்பார், |
“அகரத் திம்பர் யகரப் புள்ளியும் ஐயெ னெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்” | (தொல். மொழி. 23) |
-------------------------------------- 62தொல்காப்பியச் சூத்திர விருத்தி (பக். 45). 63பதின்மூன்றாம் நூற்றாண்டினராகக் கருதப்படும் இவ்வாசிரியர், பதஞ்சலியார் வரைந்த மாபாடியத்துக்கு உரைவிளக்கம் எழுதினார் என்பர். 64தொல்காப்பியச் சூத்திர விருத்தி (பக். 45-46). |