பக்கம் எண் : 158
  

நன்னூல் விருத்தியுரை
 

78.

  உஊ ஒஓ ஒளவிதழ் குவிவே.

      எ-னின், இதுவும் அது.

      இ-ள்: இவ்வைந்து எழுத்தும் பிறத்தற்கு ஏதுவாகிய முயற்சி இதழ்குவிவாம் எ-று. (23)
 

79.

கஙவுஞ் சஞவும் டணவு முதலிடை
நுனிநா வண்ண முறமுறை வருமே.

      எ-னின், இதுவும் அது.

      இ-ள்: கவ்வும் ஙவ்வும் முதல்நா முதலண்ணத்தையும் சவ்வும் ஞவ்வும் இடைநா
இடையண்ணத்தையும் டவ்வும் ணவ்வும் நுனிநா நுனியண்ணத்தையும் பொருந்த
இம்முறையே பிறக்கும் எ-று. (24)
 

80.

 அண்பல் லடிநா முடியுறத் தநவரும்.
  
      எ-னின், இதுவும் அது.

      இ-ள்: அண்பல் அடியை நாநுனி பொருந்தத் தவ்வும் நவ்வும் பிறக்கும் எ-று. (25)
 

81.

 அண்பல் லடிநா முடியுறத் தநவரும்.
  
      எ-னின், இதுவும் அது.

      இ-ள்: மேலிதழும் கீழிதழும் பொருந்தப் பவ்வும் மவ்வும் பிறக்கும் எ-று. (26)
 

82.

 அடிநா வடியண முறயத் தோன்றும்.
  
      எ-னின், இதுவும் அது.

      இ-ள்: அடிநா அடியண்ணத்தைப் பொருந்த யகரம் பிறக்கும் எ-று. (27)
 

83.

 அண்ண நுனிநா வருட ரழவரும்.
  
      எ-னின், இதுவும் அது.

      இ-ள்: அண்ணத்தை நுனிநாத் தடவ ரவ்வும் ழவ்வும் பிறக்கும் எ-று. (28)
 

84.

 அண்பல் லடிநா முடியுறத் தநவரும்.