| நன்னூல் விருத்தியுரை |
எ-னின், இதுவும் அது. இ-ள்: அண்பல் முதலை நாவிளிம்பு வீங்கி ஒற்ற லகாரம் ஆகியும் அண்ணத்தை நாவிளிம்பு வீங்கி வருட ளகாரம் ஆகியும் இவ்விரண்டு எழுத்தும் பிறக்கும் எ-று. (29) |
| 85. | மேற்பல் லிதழுற மேவிடும் வவ்வே. |
எ-னின், இதுவும் அது. இ-ள்: மேற்பல் கீழிதழைப் பொருந்த74 வகாரம் பிறக்கும் எ-று. (30) |
| 86. | அண்ண நுனிநா நனியுறிற் றனவரும். |
| எ-னின், இதுவும் அது. இ-ள்: அண்ணத்தை நுனிநா மிகப் பொருந்தின் றவ்வும் னவ்வும் பிறக்கும் எ-று. (31) |
| சார்பெழுத்துக்களுக்கு இடமும் முயற்சியும் |
| 87. | ஆய்தக் கிடந்தலை யங்கா முயற்சி சார்பெழுத் தேனவுந் தம்முத லனைய. |
எ-னின், சார்பெழுத்துக்கட்கு (60) இடமுயற்சி வகையால் பிறப்பு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: ஆய்தம் பிறத்தற்கு இடம் தலை; முயற்சி அங்காத்தலாம். ஒழிந்த சார்பெழுத்துக்களும் இடமுயற்சிகள் தம் முதலெழுத்துக்களோடு ஒப்பனவாய்ப் பிறக்கும் எ-று. சார்பின் சார்பாகிய ஆய்தக் குறுக்கமும் தன் முதல்போற் பிறக்கும் என்பார் எதிரது தழீஇ, ‘ஏனவும்’ என்றார். (32) |
| பிறப்பிற்குப் புறனடை |
| {88} | எடுத்தல் படுத்த னலித லுழப்பிற் றிரிபுந் தத்தமிற் சிறிதுள வாகும். |
------------------------------- 74“மேல்வாய்ப் பல்லைக் கீழுதடு பொருந்த” என்று உரை கூறி, உற என்னும் வினைக்குக் கீழிதழ் வினைமுதல் என்றும் மேற்பல் செயப்படுபொருள் என்றும் இராமாநுச கவிராயர் (நன். 85) விளக்கம் கூறுவார். ஆறுமுக நாவலரின் பிந்திய பதிப்பிலும் (1933) இவ்வுரை காணப்படுகிறது. |