| பதிப்புரை | பவணந்தி முனிவர் தொல்காப்பியத்திலிருந்து பத்துக்கு மேற்பட்ட நூற்பாக்களை ஆசிரிய வசனங்களாக எடுத்தாளுகிறார். “முன்னோர் மொழிபொருளே யன்றி யவர்மொழியும் பொன்னேபோற் போற்றுவம்” (நன். 9) என்ற நூற்பாவும், “தானெடுத்து மொழிதல்” (நன். 14) என்னும் உத்தியும் இந்த முறைக்குத் துணை செய்கின்றன. நன்னூல் தொல்காப்பியத்துக்கு வழிநூலே தவிர எதிர் நூல் (இறை. 1 உரை; யா. வி. பாயி; மயிலைநாதர் நன். 62; சங்கர நமச்சிவாயர் நன். 164) அல்ல என்பதை உணர்த்தவும் அவர் இந்த முறையைக் கையாண்டிருக்கலாம். ஆனால் பவணந்திக்கு முன் எந்த இலக்கணியும் இந்த முறையைக் கையாளவில்லை. ‘தான் எடுத்து மொழிதல்’ என்னும் நூல் உத்தியைக் கையாண்டுள்ள முறையில் தொல்காப்பியருக்கும் பவணந்தி முனிவருக்கும் நுண்ணிய வேறுபாடு காணப்படுகிறது. தொல்காப்பியர் தம்முடைய நூற்பாக்களையே தான் எடுத்து மொழிதலாகத் தொல்காப்பியத்தில் பல இடங்களில் பயன்படுத்துகிறார். காட்டாக, “அல்வழி யெல்லா முறழென மொழிப.” “அளபெடைப் பெயரே யளபெடை யியல.” “தொழிற்பெய ரெல்லாந் தொழிற்பெய ரியல.” “வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே.” என்னும் (தொல். புள்ளி. 73, 103; விளி. 18, 24, 32; புள்ளி. 11, 32, 81, 106; உயிர். 14, 23, 50, 57, 64, 74) நூற்பாக்களை எழுத்து மாறாமல் அவர் எடுத்தாளுகிறார். ஆனால் பவணந்தி முனிவர் இந்த முறையை ஏனோ பின்பற்றவில்லை. ஆசிரிய வசனங்களாகத் தமது நூலில் (நன். 6, 16, 17, 90, 252, 317, 336, 396, 404, 439) தொல்காப்பிய நூற்பாக்களை இவர் எடுத்தாளுவதோடு சில தொல்காப்பிய நூற்பாக்களைச் சிறு மாற்றங்களோடும் (நன். 232, 397, 400, 408, 431, 435) எடுத்து அமைத்துக் கொண்டார். ஆழ்ந்து நோக்கினால் இந்த முறைகள் இரண்டிலும் நிறை குறைகள்16 உண்டு. தான் எடுத்து மொழிதல் அளவோடு அமைந்தால் நூல்நெறி; அளவிறந்தால் ___________________________ 16வ. சுப. மாணிக்கம், எழுத்து முறை, தாமரைச் செல்வர் வ. சுப்பையா பிள்ளை பவளவிழா மலர், கழகம், சென்னை, 1973. பக். 63-69. | |
|
|