| நன்னூல் விருத்தியுரை | | குற்றியலிகரம் | | 93. | யகரம் வரக்குற ளுத்திரி யிகரமும் அசைச்சொன் மியாவி னிகரமுங் குறிய. | எ-னின், குற்றியலிகரம் வருமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: யகரம் வருமொழிக்கு முதலாகி வர, நிலைமொழிக்கு ஈறாகி நின்ற குற்றியலுகரம் திரிந்த இகரமும் (164) மியா என்னும் அசைச்சொல்லின்கண் இகரமும் குற்றியலிகரங்களாம் எ-று. எனவே இங்ஙனம் வரும் ஆயின் இவ்வெழுத்தின் தொடர்பால் குறுகும் என்பது பெற்றாம். உ-ம்: நாகியாது, எஃகியாது, வரகியாது, கொக்கியாது, குரங்கியாது, அல்கியாது எனவும் கேண்மியா, சென்மியா எனவும் வரும், பிறவும் அன்ன. பொதுப்படக் கூறிய குற்றியலுகரம் முப்பத்தாறானும் அசைச்சொல் மியாவினானும் குற்றியலிகரம் முப்பத்தேழாய் வருமாறு காண்க. (38) | | குற்றியலுகரம் | | {94} | நெடிலோ* டாய்த முயிர்வலி மெலியிடைத் தொடர்மொழி யிறுதி வன்மையூ ருகரம் அஃகும் பிறமேற் றொடரவும் பெறுமே. | | எ-னின்86 இடமும் பற்றுக்கோடும் சார்ந்து குற்றியலுகரம் வருமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: தனிநெடில் ஏழுடனே ஆய்தம் ஒன்றும் மொழி இடை ஈறுகளின் வரப்பெறாத ஒளகாரம் ஒழித்து, ஒழிந்த உயிர் பதினொன்றும் வல்லெழுத்து ஆறும் மெல்லெழுத்து ஆறும் வல்லெழுத்துக்களோடு தொடராத வகரம் ஒழித்து, ஒழிந்த இடையெழுத்து ஐந்தும் ஆகிய முப்பத்தாறு எழுத்தினுள் யாதானும் ஒன்று ஈற்றுக்கு அயலெழுத்தாய்த் தொடரப்பட்டு, மொழியிறுதிக்கண் வல்லெழுத்துக்களுள் யாதானும் ஒன்று பற்றுக்கோடாக, அதனை ஊர்ந்து வரின் அவ்வுகரம் தன் மாத்திரையில் குறுகும். அது தன் மாத்திரையில் குறுகுதற்கும் மொழி நிரம்புதற்கும் காரணம் இவ் ஓர் எழுத்துத் தொடர் தன் ---------------------------- 86“நெடிலொ டாய்த முயிர்வலி மெலியிடை” என்பது சங்கர நமச்சிவாயர் பாடம். | |
|
|