| நன்னூல் விருத்தியுரை | எ-னின்90 ஐகார ஒளகாரக் குறுக்கங்கள் வருமாறு உணர்த்துதல்91 நுதலிற்று. இ-ள்: ஐகாரம் தன்னைக் கருதித் தன் பெயர் கூறும் அளவில் குறுகாது, ஒழிந்த மொழி முதல், இடை, கடை என்னும் மூன்று இடத்தும் முன்னும் பின்னும் இருமருங்கும் ஆய எழுத்தின் தொடர்பால் தன் மாத்திரையில் குறுகும். ஒளகாரமும் தன் பெயர் கூறும் அளவில் குறுகாது, ஒழிந்த மொழிமுதற்கண் பின வரும் எழுத்தின் தொடர்பால் தன் மாத்திரையில் குறுகும் எ-று. ‘சுட்டளபு’ என்பது வினைத்தொகை. ‘அளபு’ என்றார் எழுத்தின் சாரியை தொடரினும் குறுகும் என்பது கருதி. எனவே ஓர் எழுத்து ஒரு மொழியாய் நிலைமொழி வருமொழியாய்த் தொடராது, தனித்து ஒரோவிடங்களின் வரின் தன் மாத்திரை குறுகாது என்பதூஉம் பெற்றாம். உ-ம்: ஐப்பசி, மைப்புறம் எனவும் வலையன் எனவும் குவளை எனவும் மௌவல் எனவும் வரும். இனி, | | | “அளபெடை தனியிரண் டல்வழி யையௌ உளதா மொன்றரை தனிமையு மாகும்” (அவி.) | எனக் கூறினாரும் உளராலோ எனின் தன் இயல்பாய இரண்டு மாத்திரையினின்றும் குறுகுதல் இல்லனவற்றை ஒழிப்பார் விகாரத்தான் மூன்று மாத்திரையும் நான்கு மாத்திரையுமாய் மிக்கு ஒலிக்கும் அளபெடையை ஒழிக்க வேண்டாமையின் அது பொருந்தாது என்க. இது மறுத்தல் என்னும் மதம், ஏனைய உடன்படல். இடவகையான் ஐகாரக் குறுக்கம் மூன்றும் ஒளகாரக் குறுக்கம் ஒன்றும் வருமாறு காண்க. இனி ஐகாரக் குறுக்கம் மொழிமுதற்கண் ஒன்றரை மாத்திரையாயும் ஏனை இடங்களின் ஒரு மாத்திரையாயும் ஒளகாரக் குறுக்கம் மொழிமுதற்கண் ----------------------------- 90“தற்சுட் டளவொழி” என்பது சங்கர நமச்சிவாயர் பாடம். 91இந்நூற்பாவுக்கு மயிலைநாதர் (நன். 94), வைத்தியநாத தேசிகர் (இல. விள. 21) கூறும் உரையும் அதற்குச் சிவஞான முனிவர் தரும் மறுப்பும் (இல. சூறா. பக். 94) ஆராயத் தக்கன. | |
|
|