| நன்னூல் விருத்தியுரை | ஒன்றரை மாத்திரையாயும் குறுகும் என்பது92 உய்த்துணர்ந்து கொள்க. அவ்வாறு உய்த்துணர்ந்து கொள்ளாக்கால், “வைகலும் வைகல் வரக்கண்டு மஃதுணரார் வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர் வைகலும் வைகற்றம் வாழ்நாண்மேல் வைகுதல் வைகலை வைத்துணரா தார்” (நாலடி. 39) எனவும், “கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும்” (குறள். 774) எனவும், “ஒளவிய நெஞ்சத்தா னாக்கமுஞ் செவ்வியான் கேடு நினைக்கப் படும்” (குறள். 169*) எனவும் வரும் இலக்கியங்கட்கு இலக்கணம் இன்றாய்93 முடியும் என்க. (40) | | மகரக் குறுக்கம்
| | 96. | ணனமுன்னும் வஃகான் மிசையுமக் குறுகும். | எ-னின், மகரக் குறுக்கம் வருமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: ணகார னகாரங்களில் ஒன்று நின்று தொடர்ந்திட, அதன் முன் வரினும் வகாரம் வந்து தொடர்ந்திட, அதன்மேல் நிற்பினும் மகரம் தன் அரை மாத்திரையிற் (99) குறுகும் எ-று. உ-ம்: “பசுப்போல்வார் முற்பட்டாற் பாற்பட்ட சான்றோர் முசுப்போல முள்காந் திருப்பர் - பசுத்தான் --------------------------- 92மொழிமுதற்கண் ஐகாரம் குறுகாது என்றும் ஒளகாரக் குறுக்கம் என்று ஒன்று இல்லை என்றும் சிவஞான முனிவர் (தொல். விரு. பக். 56-57) மறுப்பார். 93செய்யுளில் வரும் ஐகார ஒளகாரங்களை ஈரெழுத்தாகக் கொள்ளாக்கால் செய்யுளியலுள் கொண்ட எதுகை மோனைகளோடு மாறுபடும் என்று சுப்பிரமணிய தீக்கிதரும் (பி. வி. 5) சாமிநாத தேசிகரும் (இல. கொ. 91) கூறுவர். | |
|
|