| நன்னூல் விருத்தியுரை | வெருளினு மெல்லாம் வெருளுமஃ தன்றி மருளினு மெல்லா மருண்ம்” (நன். 95* மயிலை.) எனவும், “திசையறி மீகானும் போன்ம்” (பரி. 10:55*) எனவும் “தரும் வளவன்” (வி. மே.) எனவும் வரும். இனி ணகர னகரங்களின் முன் வந்த மகரம் செய்யும் என்னும் வாய்பாட்டு முற்று ஈற்றது (341, 348) என்பதூஉம் அவ்வீற்றயல் உகரம் கெட, அவ்வுகரம் ஊர்ந்த ளகர லகரங்கள் ஈற்று மகரத்தோடு மயங்காமையின் (117) மயங்குதற்கு உரிய ணகர னகரமாயத் திரிந்தன ஈண்டு நின்ற ணகர னகரம் (117, 227) என்பதூஉம் இவற்றுள் ஒன்றுடன் ஈரொற்றாய் மயங்கின் மகரம் குறுகும் (120) என்பதூஉம் இவற்றின் முன் குறுகுதல் செய்யுட் கண்ணது (120) என்பதூஉம் காணும், கூனும் என இயல்பாக நின்ற ணகர னகரங்கள் முன் இவ்வாறு வந்து மகரம் குறுகாது என்பதூஉம் பிறவும் மேல் வரும் சூத்திரங்கள் எல்லாவற்றையும் வேண்டிப் பருந்தின் வீழ்வாய் நின்ற இச்சூத்திரத்து உய்த்துணர்ந்து கொள்க. இஃது உய்த்துணர வைப்பு என்னும் உத்தி. (41) | | ஆய்தக் குறுக்கம் | | 97. | லளவீற் றியைபினா மாய்த மஃகும். | எ-னின், ஆய்தக் குறுக்கம் வருமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: லகார ளகார ஈற்றுப் புணர்ச்சியினால் வரும், “குறில்வழி லளத்தவ் வணையி னாய்தம் ஆகவும் பெறூஉம்” (நூ. 228) என்ற ஆய்தம் இருமருங்கும் ஆய எழுத்தின் தொடர்பால் தன் அரை மாத்திரையில் குறுகும் எ-று. உ-ம்: கஃறீது, முஃடீது என வரும். இது முடிவிடம் கூறல் என்னும் உத்தி. இவ்வாய்தம் குறுகாது எனக் காண்டல் விரோதம் கூறுவாரும்94 உளர். (42) ------------------------------ 94காண்டல் விரோதம் கூறுபவர் வைத்தியநாத தேசிகர் (இல. விள. 5.) | |
|
|