| நன்னூல் விருத்தியுரை | | உயிரளபெடை நான்கு மாத்திரைய ஆதலும் ஐகார ஒளகாரக் குறுக்கங்கள் ஒன்றரை மாத்திரைய ஆதலும் ஆரிடத்துள்ளும் அவை போல்வனவற்றுள்ளும் அருகி வந்து, செய்யுள் வழுவமைதியாய் முடிதலின் அவற்றை ஒழித்து, எல்லார்க்கும் ஒப்ப முடிந்து பயின்று வருவன மூன்று மாத்திரையும் ஒரு மாத்திரையுமே ஆகலின், ‘மூன்றுயி ரளபு’ என்றும், ‘ஒன்றே குறிலோ டையௌக் குறுக்கம்’ என்றும் கூறினார். குற்றியலுகரம் புணர்மொழி இடைப்படின் குறுகிக், கால் மாத்திரை97 பெறுதல் உரையிற் கோடல் என்பதனாற் கொள்க. (44) | | மாத்திரையின் அளவு | | 100. | இயல்பெழு மாந்த ரிமைநொடி மாத்திரை. | எ-னின், எழுத்தொலி எழுச்சி பலவற்றையும் அளந்து கோடற்குக் கூறிய ஒரு மாத்திரை என்னும் காலசங்கையினை உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: மாந்தருடைய, இயல்பாக எழும் இமைப்பொழுதும் நொடிப்பொழுதும்98 ஒரு மாத்திரை என்னும் வரையறைப் பொழுதாம் எ-று. ‘இமை’ என்றது இமைத்தலை. ‘நொடி’ என்றது நொடித்தலை. இவை இரண்டும் ஆகுபெயராய்க் காலத்தை உணர்த்தி நின்றன. ‘இயல்பெழும்’ என்னும் பெயரெச்சம், ‘இமைநொடி’ என்னும் பெயர்களோடு முடிந்தது. எழுத்தொலி முதலியவற்றை இயல்பு கெடுத்து, ஒருவன் வேண்டியவாறே எழுப்பினும் அவ்வாறு எழாநிற்கும். இமையும் நொடியும் இயல்பு கெடுத்து எழுப்ப வேண்டினும் அவ்வாறு எழாது, இயல்பாகவே எழாநிற்கும். ஆதலின், ‘இயல்பெழும்’ ----------------------------- 97கால், அரை போன்ற மாத்திரையின் கூறுகளை, | | | "உன்னல் காலே ஊன்றல் அரையே முறுக்கல் முக்கால் விடுத்தல் ஒன்றே" | என்னும் மேற்கோள் நூற்பாவால் குணசாகரர் (யா. கா. 4) விளக்குவார். 98"கட்புலனாகிய இமைக்காலமும் செவிப்புலனாகிய நொடிக்காலமும் கருதி" இமையும் நொடியும் மாத்திரைக்கு அளவாகக் கூறப்பட்டன என்று மயிலைநாதரும் (நன். 99), "தன் குறிப்பின்றி நிகழ்தலின் இமை முன் கூறப்பட்டது." என்று இளம்பூரணரும் (தொல். நூன். 7) உள்ளத்தால் நினைத்து நிகழ்த்தப்படாமையால் நொடியிலும் இமை சிறந்தது என்று நச்சினார்க்கினியரும் (தொல். நூன். 7) சிறப்புரை கூறுவர். | |
|
|