பதிப்புரை | மாற்றியது தமிழ் உரைமரபுக்கு ஒவ்வாது. இதற்கு மாறாகக் கவிராயர் செய்த இந்த இயல் மாற்றம் தொல்காப்பிய இயல் அமைப்புக்கு முரண்பட்டது ஆகாது என்று கருதுவோரும்19 உளர். ஆனால் அது மூலபாடத் திறனாய்வுக்கு முற்றும் முரண்பட்டது என்பதை அவர்கள் எண்ணிப் பார்ப்பது நல்லது. நூலின் துவக்கத்தில் அதன் அமைப்பு முறையைத் தொகுத்துச் சொல்வது நூலாசிரியர் மரபு. “எழுத்தசை சீர்தளை யடிதொடை. தூக்கொடு” (நூ. 1) என்று யாப்பருங்கலமும், “எழுத்தசைசீர், பந்த மடிதொடை பாவினங் கூறுவன்” (பாயி.) என்று யாப்பருங்கலக் காரிகையும் நூலின் அமைப்பைத் தொடக்க நூற்பாக்களில் தொகுத்துக் கூறும். பவணந்தி முனிவரும் இந்த மரபைத் தழுவி, நூல் நுதலும் பொருள்களை, “நூலே நுவல்வோ னுவலுந் திறனே கொள்வோன் கோடற் கூற்றா மைந்தும் எல்லா நூற்கு மிவைபொதுப் பாயிரம்.” “எண்பெயர் முறைபிறப் புருவ மாத்திரை முதலீ றிடைநிலை போலி யென்றா பதம்புணர் பெனப்பன் னிருபாற் றதுவே.” “ஒருமொழி தொடர்மொழி பொதுமொழி யென்றா இருதிணை யைம்பாற் பொருளையுந் தன்னையும் மூவகை யிடத்தும் வழக்கொடு செய்யுளின் வெளிப்படை குறிப்பின் விரிப்பது சொல்லே.” “அதுவே, இயற்சொற் றிரிசொ லியல்பிற் பெயர்வினை எனவிரண் டாகு மிடையுரி யடுத்து நான்குமாந் திசைவட சொலணு காவழி.” என்னும் (நன். 3, 57, 259, 270) நான்கு நூற்பாக்களில் தொகுத்துக் கூறுவார். உரையாசிரியர்கள், “நிறுத்த முறையானே” என்னும் உரைமரபுத் தொடரால் இதனை விளக்குவார்கள். விளக்க வேண்டிய கருத்துகளை, “முந்துநூல் கண்டு முறைப்பட _______________________ 19 க. ப. அறவாணன், 1977. பக். 60. | |
|
|