பதிப்புரை | என்னும் (நன். 168, 169) நன்னுல் நூற்பாக்களோடு ஒப்பிட்டு நோக்கினால் பவணந்தி முனிவரின் சொற்சுருக்கம், நடையியல், வைப்புமுறை முதலியவற்றின் சிறப்பியல்பு எளிதில் விளங்கும். அனைத்திற்கும் மேலாக, வாழ்வையும் சாவையும் மரபு நோக்கி, அடுத்தடு்த்து வைத்ததோடு, சாதலும் விதி என்ற தொடரால் சாவ என்னும் வினைச்சொல்லுக்குப் புணர்ச்சி விதி கூறும்போது வாழ்க்கைத் தத்துவத்தையும் உடன் உணர்த்துவது உய்த்துணர்தற்கு உரியது. இவ்வாறே, “உடன்மே லுயிர்வந் தொன்றுவ தியல்பே” (நன்.204) என்று உயிர்பண்பை உய்த்துணர்ந்து கூறும் பவணந்தி முனிவரின் திறமும் நினையத் தக்கது. தொல்காப்பியத்துக்குப் பின்னர்த் தோன்றியுள்ள செந்தமிழ் இலக்கணங்களைச் சீர்தூக்கிப் பார்த்தால் நன்னூலுக்கு இணையான நூல் எதுவும் இல்லை. இக்கருத்தை, | | “முன்னூ லொழியப் பின்னூல் பலவினும் நன்னூ லார்தமக் கெந்நூ லாரும் இணையோ வென்னுந் துணிவே மன்னுக.” | என்று (இல. கொ. 8 உரை) சாமிநாத தேசிகர் புகழ்ந்து கூறுவார். இவரைப் போலவே பவணந்தி முனிவரையும் நன்னூலையும் பலரும்21 வியந்து பாராட்டியுள்ளனர். | உரைகள் | உரைவளம் கொண்ட நூல்களுள் ஒன்று நன்னூல். நன்னூலின் உரைகளையும் உரையாசிரியர்களையும் பற்றிச் சாமிநாதையரின் நன்னூல் பதிப்புகளிலும் இலக்கிய இலக்கண வரலாறுகளிலும் பரக்கக் காணலாம். இவை தவிர, ‘எழுநூறு ஆண்டுகளில் நன்னூல்’ (க. ப. அறவாணன், 1977.) என்ற ஆய்வேட்டிலும் நன்னூலின் உரை வரலாறு ஆராயப்பட்டுள்ளது. இந்நூல் அமிர்தலிங்கம் செட்டி (பக். 259), ஆறுமுக சுவாமிகள் (பக். 256), தெய்வசிகாமணி முதலியார் (பக். 258), போப்பையர் (பக். 210), ஸ்ரீநிவாச முதலியார் (பக். 258) போன்ற பதிப்பாசிரியர்களையும் இலக்கண விளக்கம் இயற்றிய நூலாசிரியரையும் (பக். 172; 354) நன்னூல் மொழிபெயர்ப்பாளர்களையும் (பக். 179; 241-252) உரையாசிரியர்களாகக் கொண்டதால் நன்னூலுக்கு உரைப்பணி செய்தோர் ஏறத்தாழ நாற்பத்துநான்கு பேர் (பக். 89; 179) என்று மிகைப்படுத்தும். இந்தக் ________________________ 21இப்புகழ்மொழிகளை எல்லாம் சாமிநாதையரின் நன்னூல் பதிப்புகளில் (1918. பக். xvi-xv; 1925. பக். 17-18) காணலாம். | |
|
|