பதிப்புரை | “மிகத் தெளி கேள்வி அகத்தியனார்”, “ஒல்காப் பெருமைத் தொல்காப்பியனார்” (நன். 130) என்று அழகான அடைமொழிகளால் அவர குறிப்பிடுவார். அகத்தியம், தொல்காப்பியம், அவிநயம் போன்ற முன்னைத் தமிழ் இலக்கணங்களோடு நன்னூலை ஒப்பிட்டு ஆராய்ந்த முதல் உரையாசிரியர் மயிலைநாதர் உரையாசிரியர்களுள் அவரே மிகுதியான அகத்தியச் சூத்திரங்களை மேற்கோள் காட்டியுள்ளார். மயிலைநாதர் மேற்கோள் காட்டியுள்ள அகத்தியச் சூத்திரங்களையே பிற்கால உரையாசிரியர்கள் பலரும் எடுத்தாளுவார்கள். பிறர் உரைகளை எடுத்தாளும் போது அவர்களுடைய பெயர்களைச் சுட்டுவது மயிலைநாதர் முறை. காட்டாக எச்சங்களைக் கூறும் நூற்பாவின் உரையில், “இஃது ஒல்காப் புலமைத் தொல்காப்பியத்துள் உளங்கூர்கேள்வி இளம்பூரணர் எனும் ஏதமில் மாதவர் ஓதிய உரை என்று உணர்க.” (நன். 359) என்று புலமை நேர்மை புலப்பட எழுதுவார். பொருத்தமான இலக்கிய உதாரணங்களைத் தேர்ந்தெடுப்பதில் மயிலைநாதர் கைதேர்ந்தவர். அவர் காட்டியுள்ள உதாரணப் பாடல்களைப் பல இடங்களில் சங்கர நமச்சிவாயர் தழுவிக்கொள்வார். காட்டாக இடையியல் இறுதிச் சூத்திரங்கள் இரண்டிலும் மயிலைநாதர் காட்டிய உதாரணப் பாடல்கள் அனைத்தையும் சங்கர நமச்சிவாயர் தமது உரையில் எடுத்தாளுவார். இதுபோலவே ஒப்பியல் நோக்கில் மயிலைநாதர் மேற்கோள் காட்டிய பதினேழு அகத்தியச் சூத்திரங்களுள் பத்தினைச் சங்கர நமச்சிவாயரும் மேற்கோள் காட்டுவார். மயிலைநாதர் உரை ஒரு வகையில் இளம்பூரணர் உரையோடு ஒப்பிடத் தக்கது. இவ்வுரையின் சிறப்புகளைச் சாமிநாதையர் (1918. பக். xvii-xxii) ஆராய்ந்துள்ளார். மயிலைநாதர் உரையைப் பற்றி நீண்ட நாளாக ஒரு தவறான கருத்து சொல்லப்படுகிறது. சங்கர நமச்சிவாயர் உரையின் முதல் பதிப்பில், உரையாசிரியர் வரலாறு என்ற தலைப்பில், “நன்னூற் சூத்திரங்களில் விருப்பும் மயிலைநாதர் உரை அந்நூலுக்கு ஏற்ற உரை அன்று என்பதுபற்றி அதன்பால் வெறுப்பும உள்ள தம் ஆசிரியர் சாமிநாத தேசிகர், “நன்னூலுக்குச் சிறந்ததோர் உரை நீர் செய்திடுக” என்று பணித்தமையானும், கல்வி கேள்விகளிற் சிறப்புற்று, ‘முத்தமிழ்ப் புலமையும் முறையர சுரிமையும் இத்தலத் தெய்திய இறைமகன்’ என்று பாராட்டப்படும் ஊற்றுமலை மருதப்பத் தேவருடைய வேண்டுகோளாலும் இந்நூலுக்கு மிக அழகியதாகிய ஓர் உரையை இவர் இயற்றுவாராயினார். சாமிநாத தேசிகருக்கு அக்கருத்துக்கள் உண்மை, “சேற்று நிலத்திற்கவிழ்ந்த பால் தேன் நெய் முதலியனவும் சேறானாற்போல நன்னூற் சூத்திரமும் | |
|
|