பதிப்புரை | அவ்வுரையுடனே கலந்து குற்றப்பட்டது என்க; | | “முன்னூல் ஒழியப் பின்னூல் பலவினும் நன்னூ லார்தமக்கு எந்நூ லாரும் இணையோ என்னும் துணிவே மன்னுக.” “முன்னோர் ஒழியப் பின்னோர் பலரினும்” | என்றலும் ஒன்று.” (இல. கொ. சூ. 8 உரை), “அவனருளால்” (பக். 2) என்பவற்றாலும், மருதப்ப தேவர் விரும்பினமை, “நன்னூலுட் கருத்துலகோ ரறியவுரை செய்கவென” (பக். 4) என்பது முதலிய மூன்று அருமைச் செய்யுட்களாலும் விளங்கும்.” என்று சாமிநாதையர் (1925. பக். 20) முதன் முதல் இக்கருத்தை எழுதினார். இந்தப் பகுதியில் அவர் குறிப்பிட்டுள்ள கருத்துகளில் ஒன்று மட்டுமே நமது தலைப்புக்கு முக்கியம். அதாவது மயிலைநாதர் உரை நன்னூலுக்கு ஏற்றது அல்ல என்பதால் அதன் மீது வெறுப்புக் கொண்டவர் சாமிநாத தேசிகர்24 என்பதே முக்கியம். இலக்கணக் கொத்து மறுப்புரையின் (நூ. 8) பிற்பகுதியை அவர் அதற்குச் சான்றாகக் காட்டுவார். சாமிநாதையர் கொண்ட முடிபும் சான்றும் பலரால்25 எடுத்தாளப்பட்டுள்ளன; ஆனாலும் அவற்றை யாரும் ஆழமாக ஆராய முயலவில்லை. சாமிநாத தேசிகர் எழுதியுள்ள மறுப்புரையின் (இல. கொ. 8 உரை) முற்பகுதியிலும் சிறப்பாக ஆராய வேண்டிய தொடர்கள் உள்ளன. அவற்றுள், “நன்னூலார்க்குப் பின்னூலார் இச்சூத்திரத்திற்கு (நன். 66) அளவிறந்த குற்றம் கூறினர்.” என்பது முதலாவது தொடர். இத்தொடரில், “பின்னூலார்” என்பது ஒரு நூலாசிரியரையும், “இச்சூத்திரத்திற்கு” என்பது குற்றம் கூறப்பட்டது ஒரு நூற்பாவுக்கு என்பதையும், “அளவிறந்த குற்றம்” என்பது ஒன்றுக்கு மேற்பட்ட குற்றங்களையும் குறிக்கின்றன. ஆனால் மயிலைநாதர் நூலாசிரியர் அல்லர்; “அஇ உம்முதற் றனிவரிற் சுட்டே.” என்னும் நூற்பாவின் உரையில் (நன். 65) அவர் அந்நூற்பாவுக்கு எந்தக் குற்றமும் கூறவில்லை. எனவே சாமிநாத தேசிகர் எழுதியுள்ள மறுப்புரை மயிலைநாதரைக் கருதியது அல்ல என்பது தெளிவு. அப்படி என்றால் இம்மறுப்புரை _______________________ 24மயிலைநாதர் உரைப் பதிப்பில் சாமிநாதையர் இக்கருத்தைக் குறிப்பிடவில்லை. 25கழகப் புலவர் குழுவினர், நன்னூல் விருத்தியுரை, கழகம், சென்னை, 1964. பக். 19; மு. வை. அரவிந்தன், உரையாசிரியர்கள், சிதம்பரம், 1968. பக். 462; சென்னை, 1995. பக். 555; தி. வே. கோபாலையர், இலக்கண விளக்கம் எழுத்ததிகாரம், தஞ்சாவூர், 1971. பக். 97; க.ப. அறவாணன், 1977, பக். 84, 99; கி. நாச்சிமுத்து, டாக்டர் உ. வே. சா. இலக்கணப் பதிப்புகள், சென்னை, 1986. பக். 51-52; இரா. இளங்குமரன், இலக்கண வரலாறு, சென்னை, 1988. பக். 295. | |
|
|