நமக்கு விளங்குகிறது. “குற்றியலுகரம் பற்றிய நூற்பாவின் உரைக்குச் சிவஞான முனிவர் திருத்தி எழுதிய விளக்கத்தில், ‘அங்ஙனம் பாகுபடுத்துக் கருவி செய்ததனால் போந்தபயன் இன்று என்பதாம்’ (நன். 94) என்று ஒரு தொடர் உள்ளது. இதுவரை வெளிவந்த பதிப்புகளில் இத்தொடர், ‘போதப் பயன் இன்று என்பதாம்’ என்று பிழையாகக் காணப்படுகிறது. இப்பகுதி தொல்காப்பியச் சூத்திர விருத்தியிலிருந்து (பக். 54) எடுத்து எழுதப்பட்டது. அந்நூலில், ‘போந்த பயன் இன்று’ என்பதே பாடம். இந்த உண்மை மற்ற பதிப்பாசிரியர்களுக்குத் தெரிந்து அதோடு இப்பகுதியை அவர்கள் ஒப்பிட்டிருந்தால இந்தப் பிழைப்பாடம் நூற்றாண்டு விழாக்கண்டிருக்காது” என்று பதிப்பாசிரியர எழுதியுள்ள பகுதி (பதிப்புரை பக். 82) நீண்ட கால இருட்டுக்கு ஒளியூட்டி உண்மையைச் சுவைப்பட விளக்கியிருக்கிறது. பழைய பதிப்புகளைப் பின் வந்த பதிப்புகள் பல வகைகளில் பயன்படுத்தியிருக்க வேண்டும். பயன்படுத்திக்கொண்ட பதிப்புகளைக் குறிப்பிடாமல் விடுவது பெருமை அளிக்கும் செயல் ஆகாது. சில பதிப்பாசிரியர்கள் தாங்கள் பயன்படுத்திக்கொண்ட பதிப்புகளை அவ்வாறு குறிப்பிடாமல் விட்டிருப்பது தெளிவாகத் தெரிந்த நிலையில், “தடயங்களை மறைப்பது சட்டவியலில் குற்றம்; தண்டனைக்கு உரியது. ஆனால் தமிழியலில் அதுவே பாராட்டுக்குரிய தகுதியாகத் தோன்றுகிறது.” என்று (பதிப்புரை பக்.88) எல்லோர்க்கும் மனத்தில் உறைக்கும்படி முனைவர் தாமோதரன் எடுத்துக் கூறுகிறார். சந்தியைப் பற்றியும் சொற்களைப் பிரித்துப் பதிப்பிக்கும் முறையைப் பற்றியும் பதிப்பாசிரியர் கவனம் காட்டியிருப்பதும் இந்த வகையில் ஒரு பொது நெறிமுறை உருவாக வேண்டும் என்று சுட்டியிருப்பதும் தமிழுலகம் செயற்படுத்தத் தக்கன. தொட்ட பணியைத் தொய்வில்லாமல் முற்ற முடிக்கும் இயல்பினராக விளங்கும் திரு. தாமோதரன் இதற்கு முன்பே கூழங்கைத் தம்பிரான் உரையைப் பதிப்பித்து நன்னூலுக்குப் பெருமை சேர்த்தவர். இப்போது சங்கர நமச்சிவாயர் உரையின் தகுதியை நமக்கு உணர்த்தியிருக்கிறார். வழிவழியாக இறுகிப்போன தவறான நம்பிக்கையைத் தக்க சான்றுகளோடு மாற்றிச் சங்கர நமச்சிவாயரின் உரைத்திறனைத் துலக்கிக் காட்டி, உரிய முறையில் அவரைப் பாராட்டியிருப்பது இந்தப் பதிப்பின் தனிச் சிறப்பு. ஒரு பெரும் புலவருக்கு உள்ள புலமை, ஒரு அறிவியல் வல்லுநருக்கு உள்ள நெறிமுறை அறிவு, ஒரு தொழில்நுட்ப வல்லுநருக்கு உள்ள வினைநுட்பம், ஒரு | |
|
|