| நன்னூல் விருத்தியுரை |
| | நற்பனுவ னாஅல்வேதத் தருஞ்சீர்த்திப் பெருங்கண்ணுறை நெய்ம்மலி யாகுதி பொங்கப் பன்மாண் வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி யூப நட்ட வியன்களம் பலகொல் யாபல கொல்லோ பெரும” (புறம். 15:15-22*) |
என இவை சிறப்பினான் அஃறிணை முடிபு ஏற்றன. |
| | “எச்சிலார் தீண்டார் பசுப்பார்ப்பார் தீத்தெய்வம் உச்சந் தலையோ டிவையென்ப யாவருந் திட்பத்தாற் றீண்டாப் பொருள்” (ஆசாரக். 5) |
என இவை மிகுதியினான் அஃறிணை முடிபு ஏற்றன. |
| | “வடுக ரருவாளர் வான்கரு நாடர் சுடுகாடு பேயெருமை யென்றிவை யாறுங் குறுகா ரறிவுடை யார்” (தொல். கிளவி. 51 இளம்.) |
எனவும், “மூர்க்கனு முதலையுங் கொண்டது விடா” (நன். 377 மயிலை.) எனவும் இவை இழிபினான் அஃறிணை முடிபு ஏற்றன. பன்மை ஒரு முடிபின என்னாது, ‘ஒருமுடிபின’ என வாளா கூறினமையின், “தானுந் தேரும் பாகனும் வந்தென் னலனுண்டான்” (யா. வி. 28) எனத் திணை விரவிச் சிறப்பினான் ஆண்பால் முடிபு ஏற்றலும், |
| | “தொல்லை நால்வகைத் தோழருந் துணைமணி நெடுந்தேர் மல்லற் றம்பியு மாமனு மதுவிரி கமழ்தார்ச் செல்வன் றாதையுஞ் செழுநக ரொடுவள நாடும் வல்லைத் தொக்கது வளங்கெழு கோயிலு ளொருங்கே” (சீவக. 2360*) |
எனத் திணை விரவிச் சிறப்பினான் ஒருமை முடிபு ஏற்றலும் கொள்க. |
| | “நானுமென் சிந்தையு நாயகனுக் கெவ்விடத்தோந் தானுந்தன் றையலுந் தாழ்சடையோ னாண்டிலனேல்” (திரு. 229:1-2) |
என ஆண்பாலும் பெண்பாலும் விரவிச் சிறப்பினான் ஒரு முடிபு ஏற்றன. |
“சொற்றொறு மிற்றிதன் பெற்றி” (நூ. 461) என்பதனானே விரவாது எண்ணித், தோழனும் தானும் வந்தான், தோழியும் தானும் வந்தாள் என முடிதலும் கொள்க. கறியும் சோறும் உண்டான், மாலையும் முடியும் கவித்தான், குஞ்சமும் குடையும் |