பக்கம் எண் : 454
  

நன்னூல் விருத்தியுரை

  “தாதாய் மூவே ழுலகுக்குந் தாயே” (திரு. 444:1)
 
என்பது சிறப்பின் ஆண்பால் பெண்பால் ஆயிற்று.
 
  “எனைத்துணைய ராயினு மென்னாந் தினைத்துணையுந்
தேரான் பிறனில் புகல்” (குறள். 144)
 
என்பது செறலின் பலர்பால் ஒருமைப்பால் ஆயிற்று. பெண்வழிச் செல்வானை நோக்கி
இவன் பெண் என்பது இழிவின் ஆண்பால் பெண்பால் ஆயிற்று. ஓர் ஆவினை என்
அம்மை வந்தாள் என்பது உவப்பின் அஃறிணை உயர்திணை ஆயிற்று.
 
  “செந்தார்ப் பசுங்கிளியார் சென்றார்க்கோ ரின்னுரைதான்
தந்தாரேற் றந்தாரென் னின்னுயிர்” (சீவக. 1036:1-2)
 
என்பது உயர்வின் அஃறிணை உயர்திணை ஆயிற்று. “தம்பொரு ளென்பதம் மக்கள்”
(குறள். 63) என்பது சிறப்பின் உயர்திணை அஃறிணை ஆயிற்று.
 
  “ஏவவுஞ் செய்கலான் றான்தேறா னவ்வுயிர்
போஒ மளவுமோர் நோய்” (குறள். 848)
 
என்பது செறலின்377 உயர்திணை அஃறிணை ஆயிற்று. நாம் அரன் உடைமை என்பது
இழிப்பின் உயர்திணை அஃறிணை ஆயிற்று. பிறவும் அன்ன.

     “சொற்றொறு மிற்றிதன் பெற்றி” (நூ. 461) என்பதனானே புதல்வனை அப்பன்
வந்தான் என்றும் புதல்வியை அம்மை வந்தாள் என்றும் வரும் மரபு வழுவமைதிகளும்
கொள்க. இவ்வழுவமைதி உருவக உவமைகளின் வழுவி அமைவன ஒழியக் கொள்க. (28)
 

பால் இடங்களுக்கு வழுவமைதி
 

380.

ஒருமையிற் பன்மையும் பன்மையி னொருமையும்
ஓரிடம் பிறவிடந் தழுவலு முளவே.
 
     எ-னின், முற் கூறிய உவப்பு முதலிய காரணத்தான் அன்றி அமைந்த பால்
வழுவமைப்பும் அவ்வாறு அமைந்த இட வழுவமைப்பும் உணர்த்துதல் நுதலிற்று.

     இ-ள்: ஒருமைப்பாலின்கண் பன்மைச்சொல்லைத் தழுவிக் கூறுதலும
பன்மைப்பாலின்கண் ஒருமைச்சொல்லைத் தழுவிக் கூறுதலும் ஓர் இடத்தின்கண் பிற
இடச்
-------------------------------
     377இது இழிப்பின்கண் உயர்திணை அஃறிணை ஆயிற்று என்று
மயிலைநாதரும் (நன். 378) வைத்தியநாத தேசிகரும் (இல. விள. 299) கூறுவர்.