| நன்னூல் விருத்தியுரை | இரண்டும் சிறந்தும் முன்னைய இரண்டும் அத்துணைச் சிறப்பின்றியும் வருதல் காட்டிய உதாரணங்களுள் காண்க. (30) | | காலம் | | 382. | இறப்பெதிர்வு நிகழ்வெனக் கால மூன்றே. | எ-னின், முன்னர் வழு உணர்த்தும் சூத்திரத்துள் (375) முதற்கண் நின்ற திணை பால் இடங்களின் பெயரும் முறையும் தொகையும் பெயரியலுள் (261, 262, 263, 266) போந்தமையின் அவற்றை ஒழித்து, இறுதிக்கண் நின்ற காலம் முதல் நான்கினையும் உணர்த்தினல்லது அவற்றின் வழுவும் வழாநிலையும் வழுவமைதியும் தோன்றாமையின் அவற்றுள் காலத்தின் பெயரும் முறையும் தொகையும் உணர்த்துதல் நுதலிற்று. பிறிதோர் இலக்கணம் கூறிய முகத்தான் முன்னர் (142, 143, 144, 145, 340, 342, 343) விளங்கிக் கிடந்த கால விகற்பங்களை ஈண்டுத் தொகுத்து உணர்த்தினமையின் இது முடிந்தது முடித்தல் என்னும் உத்திக்கு இனம். இ-ள்: முன்னர்க் கூறிய (375) காலம் இறந்தகாலமும் எதிர்காலமும் நிகழ்காலமும் என மூன்றாம் எ-று. யாது ஒரு பொருளும் தோன்றும் அளவின் தோன்றி, வளரும் அளவின் வளர்ந்து, முதிரும் அளவின் முதிர்ந்து, அழியும் அளவின் அழியுமன்றி உயிர்கள் வேண்டியவாறு ஆகாமையின் அவற்றை அவ்வளவின் அவ்வாறு இயற்றுவது காலம் எனவும் அதனால் இயலும் பொருள்களின் தொழில் இறந்ததும் எதிர்வதும் நிகழ்வதும் ஆதலின் அவ்வாறு இயற்றும் காலமும் மூன்று கூற்றதாம் எனவும் உய்த்துணர்தலின் இங்ஙனம் உணராது, காலம் இன்று எனவும் நிகழ்காலம் ஒன்றுமே எனவும் இறந்தகாலம், எதிர்காலம் இரண்டுமே எனவும் கூறுவார் கூற்றை380 விலக்கிக், ‘கால மூன்றே’ என்றார் இதன் திறம் இன்னும் விரித்து உரைப்பின் பெருகும். நிகழ்காலம்போல வெள்ளிடைப் பொருளன்றி இறந்தகாலம், எதிர்காலம் இரண்டும் மறைபொருளாய் நிற்றலின் இறப்புநிகழ்வு என்னாது, ‘இறப்பெதிர்வு’ என்றார். (31) | | கால வழுவமைதி | | 383. | முக்கா லத்தினு மொத்தியல் பொருளைச் செப்புவர் நிகழுங் காலத் தானே. | எ-னின், கால வழுவமைப்பு உணர்த்துதல் நுதலிற்று. ------------------------------- 380இக்கருத்துக்களை மயிலைநாதர் (நன். 381) விரிவாக எடுத்துக்காட்டுவார். | |
|
|