பக்கம் எண் : 459
  

நன்னூல் விருத்தியுரை

     அக்காட்டில் புகின் கூறை கோட்பட்டான், கள்வான் நினையின் கை
அறுப்புண்டான்: இது மிகுதியின் எதிர்காலம் இறந்தகாலம் ஆயிற்று. கூறை
கோட்படுதலும் கை அறுப்புண்ணுதலும் தவறினும் தவறும் ஆதலின் இது மிகுதி
ஆயிற்று.

     அறம் செயின் சுவர்க்கம் புக்கான், எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறின்
மழை பெய்தது: இது தெளிவின் எதிர்காலம் இறந்தகாலம் ஆயிற்று. உரை
அளவையானும்383 காட்சி அளவையானும் இவற்றிற்கு இவை காரணமாகத்
தெளிந்தமையின் இது தெளிவு ஆயிற்று.

     யாம் பண்டு விளையாடுவது இக்கா, யாம் பண்டு விளையாடுகிறது இக்கா: இது
காரணமின்றி இயல்பினான் இறந்தகாலம் எதிர்காலமும் நிகழ்காலமும் ஆயிற்று. பிறவும்
அன்ன.

     இவ்வுதாரணங்களுள் சிலவற்றை மாறிக் காட்டுவாரும்384 உளர். அவை
பொருந்தாமை அப்பொருள்களான் உணர்க. உழுது வருக, உண்டு வருக என்புழி
உழுது, உண்டு என்பனவற்றையும் இயல்பின் எதிர்காலம் இறந்தகாலமாய் மயங்கின
என்பாரும்385 உளர். வருதலை நோக்குங்கால் அவை இறந்தகாலமே ஆதலின்
வழாநிலையாம் என்க. (33)
 

அறுவகை வினா
 

385.

அறிவறி யாமை யையுறல் கொளல்கொடை
ஏவ றரும்வினா வாறு மிழுக்கார்.
 
 
     எ-னின், வினாவின் பெயரும் முறையும் தொகையும் உணர்த்துதல் நுதலிற்று.

     இ-ள்: அறிவு முதலியன தருதலான் வரும் வினா ஆறனையும் களையாது
கொள்வர் புலவர் எ-று.

     வ-று: ஆசிரியன் இச்சூத்திரத்திற்குப் பொருள் யாது என்பது அறிவினா.
மாணாக்கன் அவ்வாறு கூறுவது அறியா வினா. குற்றியோ மகனோ என்பது ஐயவினா.
பொன்
-------------------------------
     383காட்சி, கருதல், உரை, இன்மை, பொருள், ஒப்பு என்னும் அறுவகை
அளவைகளுள் (சிவ. சுப. அள. 1) உரை அளவை ஒன்று. இது வடமொழியில்
ஆகமப் பிரமாணம் என்றும் சத்தப் பிரமாணம் என்றும் சொல்லப்படும். காட்சி
அளவை முன்பு (நன். 261) விளக்கப்பட்டது.
     384இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினயர், கல்லாடர் (தொல்.
வினை. 43) மயிலைநாதர் (நன். 383) வைத்தியநாத தேசிகர் (இல. விள. 304)
முதலியோர் இந்த உதாரணங்களுள் சிலவற்றை மாற்றிக் காட்டுவர்.
     385இவை இயல்பான் மயங்கின என்று மயிலைநாதர் (நன். 383) கூறுவார்.