| நன்னூல் விருத்தியுரை | உளவோ மணி உளவோ என்பது கொளல்வினா. சாத்தற்கு ஆடை இல்லையோ என்பது கொடைவினா. சாத்தா உண்டாயோ என்பது ஏவல்வினா. இவற்றுள் அறிவும் அறியாமையும் இவ்விரண்டும் விரவிய ஐயமும் அன்றி வினாவைத் தருவது ஒன்று இன்மையின் அவற்றை முற் கூறி, ஏனையவும் அவற்றின்கண் அடங்குமேனும் கொளல், கொடை, ஏவல் என்னும் பொருள விசேடத்தான் வேறு விதந்து பிற் கூறி, மூன்று ஆகற்பாலனவற்றை ஆறாகக் கூறுதல் தொன்றுதொடு நெறி என்பார், ‘ஆறு மிழுக்கார்’ என்றும் கூறினார். | | | “அறியான் வினாவ லறிவொப்புக் காண்டல் ஐய மறுத்த லவனறிவு தான்கோடல் மெய்யவற்குக் காட்டலோ டைவகை வினாவே” (நன். 384* மயிலை.) | என்னும் ஒருசார் ஆசிரியர் கூற்றினுள்ளும் பின்னைய இரண்டும் முன்னைய மூன்றனுள் அடங்கும் என்பது தோன்ற, அவற்றை முற் கூறுதல் காண்க. (34) | | எண்வகை விடை | | 386. | சுட்டு மறைநே ரேவல் வினாதல் உற்ற துரைத்த லுறுவது கூறல் இனமொழி யெனுமெண் ணிறையு ளிறுதி நிலவிய வைந்துமப் பொருண்மையி னேர்ப. | எ-னின், இறையின் பெயரும் முறையும் தொகையும் வழுவமைதியும் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: இவ் இறை எட்டனுள் முன்னைய மூன்றும் செவ்வன் இறையாம்; பின்னைய ஐந்தும் இறைப்பொருள் பயத்தலின் இறையாகத் தழீஇக்கொள்வர் புலவர் எ-று. எனவே இறையாவது செவ்வன் இறையும் இறை பயப்பதும் என இருகூற்றதாம் என்க. வ-று: வஞ்சிக்கு வழி யாது என்றவழி இது என்றும், “மாவீழ் நொச்சி” (நன். 389 மயிலை.) என்பதற்குப் பொருள் யாது என்றவழி வண்டு வீழ்ந்து தேன் உண்ணும நொச்சிப்பூ என்றும் கருதிக் கூறும் தொடக்கத்தன எல்லாம் சுட்டு. சாத்தா இது சொய்வாயோ என்றவழிச் செய்யேன் என்பது மறை; செய்வேன் என்பது நேர்; நீ செய் என்பது ஏவல்; செய்வேனோ என்பது வினாதல். இவ்வோகார இடைச்சொற்கு எதிர்மறை முதலிய பொருள் (423) விலக்கி, ஆற்றலான் வினாப்பொருளே கொள்க. உடம்பு நொந்தது, நோவாநின்றது என்பது உற்றது உரைத்தல். நோவாநின்றது என்பது | |
|
|