| நன்னூல் விருத்தியுரை | இனி எண்ணியவழியும் சில நாள் சோறும் சில நாள் இடியும் சில நாள் பாலும் சில நாள் நீரும் சில நாள் சருகும் அயின்றார், மிசைந்தார் என்க. கறியும் சோறும் உண்டான் என எண்ணிக், கறியோடு விராய சோற்றை உண்டான் என்னும் பொருட்டாய்ச் சிறப்பின் ஒரு முடிபு ஏற்றனவற்றிற்கும் இவற்றிற்கும் வேற்றுமை உணர்க. குழையும் நெடுநாணும் அணிந்தார், பறையும் குழலும் இயம்பினார், வாளும் வேலும் வழங்கினார் என்க. பிறவும் அன்ன. (38) | | சிறப்புவினைகள் மரபு வழுவாமை | | 390. | வினைசார் பினமிட மேவி விளங்காப் பலபொரு ளொருசொற் பணிப்பர்சிறப் பெடுத்தே. | எ-னின், இதுவும் அது. இ-ள்: குறித்த பொருளை விளக்கும் வினையினையும் சார்பும் இனமும் இடமும் முதலிய பெயரினையும் பல பொருள் ஒரு செல் பொருந்தி விளங்கிக் கிடந்ததேல் அதனை வாளா கூறி, அவ்வினைபெயர்களைப் பொருந்தாமையால் விளங்காது கிடந்ததனைச் சிறப்போடு கூட்டிக் கூறுவர் புலவர் எ-று. பாக்குவெற்றிலை தின்றான் என்றால் சுண்ணாம்பும் கர்ப்பூரமும் உடன் தின்றான் என்பது தழீஇக்கோடல்போல் சார்பு, இனம், இடம் எனச் சிறந்தன எடுத்து ஓதி, ஏனைய பெயர்களையும் தழீஇக்கோடலின் முதலிய என்றாம். அன்றி, “இனைத்தென் றறிபொருள்” (நூ. 399) எனக் கூறுதலும் ஒன்று. ‘மேவி’ என்னும் வினையெச்சம், ‘விளங்கா’ என்பதன்கண் முதனிலையோடு முடிந்தது. வ-று: மா என்பது மாமரத்திற்கும் வண்டிற்கும் ஒருசார் விலங்கிற்கும் திருவிற்கும் பொதுவான பல பொருள் ஒரு சொல். இப்பொருள்களுள் மாப் பூத்தது, மாக்காய்த்தது என்ற துணையானே மரம் என்பது வினையான் விளங்கிற்று. “மாவீழ் நொச்சி மணிக்குர லூழ்த்தது” (நன். 389 மயிலை.) என்ற துணையானே வண்டு என்பது சார்பான் விளங்கிற்று. சேனை, யானை, தேர், மாச் சதுரங்கம் என்ற துணையானே குதிரை என்பது இனத்தான் விளங்கிற்று. “சொற்றொறு மிற்றிதன் பெற்றி” (நூ. 461) என்பதனானே இதனுள் சேனை என்பது யானை முதலிய மூன்று உறுப்பினையும் ஒழித்துக் காலாள்மேல் சேறலும் இவ்விதியின்பாற் படுத்துக. “மாமறுத்த மலர்மார்பு” (புறம். 7:5) என்ற துணையானே திரு என்பது இடத்தான் விளங்கிற்று. இவை வாளா கூறப்பட்டன. இனி மா ஏறினான், மா யாது என்றவழிக் குறித்த பொருள் விளங்காமையின் விளங்குதற்பொருட்டுப் பாய்மா ஏறினான், மாமரத்தின்கண் | |
|
|