| நன்னூல் விருத்தியுரை | ஏறினான், பாய்மா யாது, மாமரம் யாது எனச் சிறப்பொடு கூட்டிக் கூறுக. பிறவும் அன்ன. (39) | | இசையறுத்துக் கூறப்படும் தொடர்மொழிகள் | | 391. | எழுத்திய றிரியாப் பொருடிரி புணர்மொழி இசைத்திரி பாற்றெளி வெய்து மென்ப. | எ-னின், இதுவும் அது. இ-ள்: எழுத்தினது இயல்பு வேறுபடாது பொருள் வேறுபட்டுச், சொல்லும் பொருளும் ஐயுற நிற்கும் தொடர்மொழிகள் அங்ஙனம் குறித்துக் கூறும் சொற்களின் இறுதியும் முதலும் தோன்ற, இசையறுத்துக் கூறும் வேறுபாட்டால் துணியப்படும் என்று சொல்லுவர் புலவர் எ-று. எனவே அவ்வாறு இசையறுத்துக் கூறுதல் மரபு என்பதாயிற்று. வ-று: செம்பொன்பதின்றொடி, நாகன்றேவன்போத்து, தாமரைக்கணியார், குன்றேறாமா, குறும்பரம்பு, ஆற்றுக்கரை, செம்பருத்தி என்றல் தொடக்கத் தனவற்றை அவ்வாறு இசையறுத்து உச்சரித்துக்387 காண்க. (40) | | மரபு வழாநிலையும் வழுவமைதியும் | | 392. | ஒருபொருண் மேற்பல பெயர்வரி னிறுதி ஒருவினை கொடுப்ப தனியு மொரோவழி. | எ-னின், மரபு வழுவற்க எனக் காத்தலும் அதன் வழுவமைப்பும் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: ஒரு பொருள்மேல் பல பெயர் வரும் ஆயின் பொருள் ஒன்றே என்பது தோன்ற, இறுதிக்கண் ஒரு வினை கொடுத்துக் கூறுவர்; ஒரு பொருள் ஆதல் தவறாத வழிப் பெயர்தோறும் கொடுத்துக் கூறுவர் புலவர் எ-று. ஒரு பொருட்கு ஒரு முடிபு என்பார், ‘ஒருவினை கொடுப்ப’ என்றாரன்றி ஒரு பெயர் கொடுத்தலை ஒழித்தார் அல்லர் என்க. வ-று: ஆசிரியன் பேரூர்கிழான் சாத்தன் வந்தான் எனவும் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி இவன் எனவும், ------------------------------- 387செம்பு ஒன்பதின் தொடி, செம்பொன் பதின் தொடி; நாகன் தேவன் போத்து, நாகு அன்றே வன்போத்து; தாமரைக் கணியார், தாமரைக்கு அணி யார்; குன்று ஏறா மா, குன்று ஏறு ஆமா; குறும் பரம்பு, குறும்பர் அம்பு; ஆற்றுக் கரை, ஆற்றுக்கு அரை; செம் பருத்தி, செம்பு அருத்தி என வேறுபடுத்திச் சொல்லி அறிக. | |
|
|