| நன்னூல் விருத்தியுரை |
| | “குயிலைச் சிலம்படிக் கொம்பினைத் தில்லையெங் கூத்தப்பிரான் கயிலைச் சிலம்பிற்பைம் பூம்புனங் காக்குங் கருங்கட்செவ்வாய் மயிலைச் சிலம்பகண் டியான்போய் வருவன்வண் பூங்கொடிகள் பயிலச் சிலம்பெதிர் கூய்ப்பண்ணை நண்ணும் பளிக்கறைக்கே” (திருக். 30) |
எனவும், |
| | “பொருப்பர்க் கியாமொன்று மாட்டேம் புகலப் புகலெமக்காம் விருப்பர்க் கியாவர்க்கு மேலர்க்கு மேல்வரு மூரெரித்த நெருப்பர்க்கு நீடம் பலவருக் கன்பர் குலநிலத்துக் கருப்பற்று விட்டெனக் கொய்தற்ற தின்றிக் கடிப்புனமே” (திருக். 143*) |
எனவும் இவை இறுதிக்கண் ஒரு வினையும் பெயரும் கொடுக்கப்பட்டன. இனிப் பெயர்தோறும் கொடுக்குமாறு: |
| | “மின்றோய் வரைகொன்ற வேலோன் புகுதுக இன்றேன் கமழ்தா ரியக்கன் புகுதுக வென்றோன் புகுதுக வேலோன் புகுதுக என்றே நகர மெதிர்கொண் டதுவே” (சீவக. 2122*) |
என வரும். பிறவும் அன்ன. (41) |
| சிறப்புப்பெயரோடு இயற்பெயர் வருமாறு |
| {393} | திணைநிலஞ் சாதி குடியே யுடைமை குணந்தொழில் கல்வி சிறப்பாம் பெயரோ டியற்பெய ரேற்றிடிற் பின்வரல் சிறப்பே. |
எ-னின், இதுவும் அது. இ-ள்: திணை முதலாகக் கல்வி ஈறாக விதந்தன முதலியபற்றி வரும் சிறப்புப்பெயருடனே இயற்பெயரை ஒரு பொருள் ஒருங்கு ஏற்கும் ஆயின் அவ்வியற்பெயர் பின் வருதல் சிறந்த மரபாம் எ-று. ஏற்றற்கு வினைமுதல் ஒரு பொருள் என்பது மேலைச் சூத்திரத்தால் பெற்றாம். ‘சிறப்பே’ என்றமையான் முன் வரும் என்பதூஉம் அது வழுவமைதி என்பதூஉம் பெற்றாம். வ-று: குன்றவன் கொற்றன், அருவாளன் அழகன், பார்ப்பான் பாராயணன், ஊர்கிழான் ஓணன், பொன்னன் பொறையன், கரியன் கம்பன், நாடகி நம்பி, ஆசிரியன் |