பக்கம் எண் : 467
  

நன்னூல் விருத்தியுரை
 

     பெயர்க்குப் பின்னும் முன்னும் சுட்டுப்பெயர் வருதல் மரபாம் அன்றே? இதனை
வழுவற்க எனக் காத்தல் எவ்வழு வாராமை கருதி எனின், ‘சுட்டுப் பெயர்பின்
வரும்வினை யெனின்’ எனக் கூறினமையின் வினை இல்வழிச் சுட்டுப்பெயர் படர்க்கை
முப்பெயர்க்கும் பின் வருமோ முன் வருமோ இருமருங்கும் வருமோ வாராது ஒழியுமோ
யாங்ஙனம் ஆங்கொல்? என்னும் ஐயம் அறுத்தற்குக் கூறினாரன்றி, இது வழுவற்க
எனக் காத்தார் அல்லர். அக்கருத்துச், ‘சுட்டுப் பெயர்பின் வரும்வினை யெனின்’
என்றதற்கே கொள்க. அதனை அவ்வாறு காத்தல் எவ்வழு வாராமை கருதி எனின்
நம்பி வந்தான் அவற்குச் சோறு இடுக என்பான் அவற்குச் சோறு இடுக நம்பி வந்தான்
என்றேனும் அவன் வந்தான் நம்பிக்குச் சோறு இடுக என்றேனும் சுட்டுப்பெயரை முன்
வைத்துக் கூறின் அஃது ஒரு பொருள்மேல் இருபெயர் வந்தது ஆகாது, நம்பி வேறு
அவன் வேறாய் முடியும்; அவ்வழு வாராமை கருதி என்க.

     இனிச் செய்யுட்கு ஏற்புழி வருமாறு:
 
  “அவனணங்கு நோய்செய்தா னாயிழாய் வேலன்
விறன்மிகுதார்ச் சேந்தன்பேர் வாழ்த்தி - முகனமர்ந்
தன்னை யலர்கடப்பந் தாரணியி னென்னைகொல்
பின்னை யதன்கண் விழைவு* (தொல். கிளவி. 39* இளம்.)
 
என வரும். செய்யுட்கண் பின் வருதல் வழுவற்க எனக் காத்தலும் இப்பாட்டின்கண்
முன் வருதல் வழுவமைதியும் ஆம் என்க. பிறவும் அன்ன.(43)
 

அடுக்குத்தொடர்
 

{395}

அசைநிலை பொருணிலை யிசைநிறைக் கொருசொல்
இரண்டு மூன்றுநான் கெல்லைமுறை யடுக்கும்.
 
     எ-னின், இதுவும் அது.

     இ-ள்: அசைநிலைக்கும் விரைவு, வெகுளி, உவகை, அச்சம், அவலம் முதலிய
பொருள்நிலைக்கும் இசைநிறைக்கும் ஒரு சொல் இரண்டு, மூன்று, நான்களவு முறையே
அடுக்கும் எ-று.

     எனவே அசைநிலைக்கு இரண்டும் பொருள்நிலைக்கு இரண்டும் மூன்றும்
இசைநிறைக்கு இரண்டும் மூன்றும் நான்கும் அடுக்கும் என்பதாயிற்று.

     வ-று: ஒக்கும் ஒக்கும், அன்றே அன்றே என்பன அசைநிலை. உண்டேன்
உண்டேன், போ போ போ என்பன விரைவு. எய் எய், எறி எறி என்பன வெகுளி.
வருக