| நன்னூல் விருத்தியுரை |
எனவே பிரிவு உள்ளனவற்றைக் கூறார் என்பதாயிற்று. |
வ-று: ஆசிரியன் பேரூர்கிழான் சாத்தன் வந்தான், பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி வந்தான் என்பன பிரிவு இலவாய்ப் பல பெயரும் ஒரு பொருள்மேல் சென்று, கேட்போர்க்குக் கூறுவோன் கருதிய பொருள் விளக்கி நின்றன. |
| | “வையைக் கிழவன் வயங்குதார் மாணகலந் தையலாய் நீயின்று நல்கினை நல்காயேற் கூடலார் கோவொடு நீயும் படுதியே நாடறியக் கவ்வை யொருங்கு” (தொல். எச்ச. 63* இளம்.) |
எனவும், |
| | “கொய்தளிர்த் தண்டலைக்390 கூத்தப் பெருஞ்சேந்தன் வைகலு மேறும் வயக்களிறே - கைதொழுவல் காலேக வண்ணனைக் கண்ணாரக் காணவெஞ் சாலேகஞ் சார நட” (தொல். எச்ச. 63* இளம்.) |
எனவும் சுட்டின் பொருளவாய் வரும் பெயரொடு தொக்க ஒரு பொருட் பல பெயர்களும் அன்ன. ‘பிரிவு’ என்றதற்கு இவ்வாறு பொருள் கூறாது, “கொய்தளிர்த் தண்டலை” (தொல். எச்ச. 63 இளம்.) என்னும் பாட்டினுள் காலேகவண்ணம் சேந்தனுக்கும் பிறர்க்கும் உண்டாதலைப் பிரிவு என்று கருதி, இது வழு என்பாரும்391 உளர். காலேகவண்ணம் பொதுவியல்பன்றிச் சேந்தனிற் பிரிந்தது அன்று ஆதலானும் சேந்தனைக் களிற்றின்மேல் சேய்மைக்கண் வரக் கண்டாள் அவனைக் கண்ணாரக் காண வேண்டும் பெருவேட்கை தந்தது அவனது காலேகவண்ணம் என்பாள் அவ்வாறு கூற வேண்டும் ஆதலானும் இது சான்றோர் இலக்கியம் ஆதலானும் அது பொருள் அன்று என்க. இனிப் பிரிவு உளதாய் வழுவியது யாதோ எனின், “பகையியல் பாயிலி படைக்கை மறவன்” (வி. மே.) என வரின் பகை இயல்பாய் இலியைப் படைக்கை மறவன் என்றல் கூடாமையின் பிரிந்து வழு ஆம் என்க. பிறவும் அன்ன. (46) ------------------------------ 390இப்பாடலை முத்தொள்ளாயிரம் என்பதற்குப் (சோம. இளவரசு, 1981. பக். 491) போதிய சான்று இல்லை. 391இளம்பூரணரும் (தொல். எச்ச. 63) மயிலைநாதரும் (நன். 396) இதனை வழு என்பர். |