| நன்னூல் விருத்தியுரை | | | “கவிசெந் தாழிக் குவிபுறத் திருந்த செவிசெஞ் சேவலும் பொகுவலும் வெருவா வாய்வன் காக்கையுங் கூகையுங் கூடி” (புறம். 238:1-3) | என வருவன கொம்பு கூர் மாடு, மடல் விரிதாழை என்றாற்போல வருதலின், “உயர்திணை தொடர்ந்த பொருண்முத லாறும்” (நூ. 377) என்னும் சூத்திரத்துள் அஃறிணையோடு சார்த்தின் அஃறிணை முடிபினவாம் என அமைத்ததன்பாற் படும் என்க. (52) | | இயற்கைப்பொருளைக் கூறுமாறு | | 404. | இயற்கைப் பொருளை யிற்றெனக் கிளத்தல். | எ-னின்398 மரபு வழுவமைப்பு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: இயற்கைப்பொருள் செயற்கைப்பொருள் (405) என இருவகைப்படும்399 பொருள்களுள் இயற்கைப்பொருளை இத்தன்மைத்து என்று கூறுக எ-று. இயற்கை என்பது அவிகாரம்; செயற்கை என்பது400 விகாரம். வ-று: மெய் உள்ளது, பொய் இல்லது, நிலம் வலிது, நீர் தண்ணிது, தீ வெய்து, மயிர் கரியது, பயிர் பசியது என வரும். நிலம், நீர் முதலிய பூதங்கள் மாயையின் விகாரம் என்பதை நோக்கின் செயற்கைப்பொருள் ஆயினும் பூதத்தின் விகாரங்களை நோக்கின் இயற்கைப்பொருளாம் என்க. ‘இயற்கைப் பொருளை யிற்று’ என்னும் வினைக்குறிப்பாகிய செயற்படுத்துக் கூறுதலின் இது வழுவமைதி ஆயிற்று. இது கருதாது, இவ்வாறு கூறுதல் மரபு என்பாரும்401 உளர். அது நிற்க. -------------------------------- 398இது தொல்காப்பிய (கிளவி. 19) நூற்பா. 399உலகத்துப் பொருள் எல்லாம் இயற்கைப்பொருளும் செயற்கைப்பொருளும் என இருவகைப்படும் என்று இளம்பூரணர் (தொல். கிளவி. 19) பாகுபடுத்துவார். 400இயற்கையாவது பொருளுக்குப் பின் தோன்றாது உடன் நிகழும் தன்மை; செயற்கையாவது ஒரு காரணத்தால் திரியும் தன்மை என்று சேனாவரையர் (தொல். கிளவி. 19, 20) விளக்குவார். 401இளம்பூரணரும் (தொல். கிளவி. 19) மயிலைநாதரும் (நன். 403) இவ்வாறு கூறுதல் மரபு என்பர். | |
|
|