பக்கம் எண் : 481
  

நன்னூல் விருத்தியுரை
 

  “தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்” (குறள். 293),

“வண்சிறைப் பவளச் செவ்வாய்ப் பெடையன மடமை கூரத்
தண்கய நீருட் கண்ட தன்னிழல் பிறிதென் றெண்ணிக்
கண்டனங் கள்வ மற்றுன் காதலி தன்னை நீர்க்கீழ்ப்
பண்டைய மல்லம் வேண்டா படுக்கவென் றூடிற் றன்றே” (சீவக. 1623*),

“கருவிரற் செம்முக வெண்பற்சூன் மந்தி
பருவிரலாற் பைஞ்சுனைநீர் தூவிப் - பெருவரைமேல்
தேன்றேவர்க் கீயு மலைநாட வாரலோ
வான்றேவர் கொட்கும் வழி” (திணை. நூற். 10*),
 
எனவும் முறையே காண்க.

     ‘அஃறிணை மருங்கினும்’ என்ற உம்மையான் உயர்திணை மருங்கினும் இவ்வாறு
சொல்லப்படுதல் புலம்பல் முதலியவற்றுள் காண்க. (58)
 

அணிகளில் திணை சினை முதல்கள் மயங்குதல்
 

410.

உருவக வுவமையிற் றிணைசினை முதல்கள்
பிறழ்தலும் பிறவும் பேணினர் கொளலே.
 
     எ-னின், இதுவும் அது.

     இ-ள்: உருவகத்தின்கண்ணும் உவமைக்கண்ணும் இருதிணை தம்முள் மயங்குதலும்
சினை முதல் தம்முள் மயங்குதலும் இவ்வியலுள் சொல்லாது ஒழிந்தனவும்
போற்றிக்கொள்க எ-று.

     வ-று:
  “மன்னர் மடங்கன் மறையவர் சொன்மாலை
அன்ன நடையினார்க் காரமுதந் - துன்னும்
பரிசிலர்க்கு வானம் பனிமலர்ப்பூம் பைந்தார்
எரிசினவேற் றானையெங் கோ” (பு. வெ. 189*)
 
என்பன உயர்திணை அஃறிணையோடு மயங்கின.
 
  “தாழிருந் தடக்கையு மருப்புந் தம்பியர்
தோழர்தன் றாள்களாச் சொரியு மும்மதம்