| நன்னூல் விருத்தியுரை |
| | ஆழ்கடற் சுற்றமா வழன்று சீவக ஏழுயர் போதக மினத்தொ டேற்றதே” (சீவக. 775) |
என்பன உயர்திணை அஃறிணையோடும் முதல் சினையோடும் மயங்கின. முகமதி என்பது சினை முதலோடு மயங்கிற்று. |
| | “அகழ்கிடங் கந்துகி லார்ந்த பாம்புரி புகழ்தரு மேகலை ஞாயில் பூண்முலை திகழ்மணிக் கோபுரந் திங்கள் வாண்முகஞ் சிகழிகை நெடுங்கொடி செல்விக் கென்பவே” (சீவக. 1444*) |
இஃது அஃறிணை உயர்திணையோடு மயங்கிற்று. இவை உருவகம். |
| | “கொங்கலர் கோதைக் குமரி மடநல்லாள் மங்கலங் கூற மலிவெய்திக் - கங்கையாள் பூம்புன லாகந் தழீஇயினான் போரடுதோள் வேம்பார் தெரியலெம் வேந்து” (பு. வெ. 224*), “இலமென் றசைஇ யிருப்பாரைக் காணின் நிலமென்னு நல்லா ணகும்” (குறள். 1040), “வருந்தி யீன்றாண் மறந்தொழிந்தாள் வளர்த்தாள் சொற்கேட் டில்கடிந்தாள் முருந்தின் காறுங் கூழையை முனிவார் நின்னை யென்முனிவார் பொருந்திற் றன்றா லிதுவென்னாய் பொன்று மளித்திவ் வுயிரென்னாய் திருந்து சோலைக் கருங்குயிலே சிலம்ப விருந்து கூவுதியால்” (சீவக. 1661) |
என்றல் தொடக்கத்தனவும் அன்ன. “மல்லன் மலையனைய மாதவரை வைதுரைக்கும்” (சீவக. 2789:1) என்பது உயர்திணையோடு அஃறிணை மயங்கிற்று. “கல்விசேர் மாந்திரி னிறைஞ்சிக் காய்த்தவே” (சீவக. 53:4) என்பது அஃறிணையோடு உயர்திணை மயங்கிற்று. கயற்கண் என்பது சினை முதலோடு மயங்கிற்று. தளிர்மேனி என்பது முதல் சினையோடு மயங்கிற்று. பிறவும் அன்ன. |
| | “தருமன் றண்ணளி யாற்றன தீகையால் வருணன் கூற்றுயிர் மாற்றலின் வாமனே |