பக்கம் எண் : 483
  

நன்னூல் விருத்தியுரை
 

  அருமை யாலழ கிற்கணை யைந்துடைத்
திரும கன்றிரு மாநில மன்னனே” (சீவக. 160),

“இந்திர குமரன் போல விறைமக னிருந்து காண” (சீவக. 1253:3),
 
என்றல் தொடக்கத்தனவாய் மயங்காது வருதல் மரபாம் ஆதலின் இது வழுவமைதி
ஆயிற்று.

     இனிப், ‘பிறவும்’ என்றதனால் உருவக உவமைக்கண் இவன் பாரதி, இவன் பாரதி,
அனையான் எனப் பால் மயங்கக் கூறுதலும் கயலினது பிறழ்ச்சி போலும் கண்ணினது
பிறழ்ச்சி என்பார் கயற்கண் என்று சொல்லின் முடிவின் அப்பொருள் முடியாது எஞ்சக்
கூறுதலும் பிறவற்றுள்ளும் இவ்வாறு எஞ்சக் கூறுதலும் செங்கோல், கொடுங்கோல்,
வீரக்கழல், சினவேல் என ஒரு பொருள் தன்மையை மற்றொரு பொருள்மேல் வைத்துக்
கூறுதலும் ஈந்தான் என்பார் அருளினான் என ஒரு வினையை மற்றொரு வினையால்
கூறுதலும்,
 
  “அடிவண்ண மல்லா லலங்குதார்க் கோதை
முடிவண்ணங் கண்டறியா வேந்து” (நன். 409 மயிலை.),

“துஞ்சாக் கண்ண வடபுலத் தரசே” (புறம். 31:17),
 
என உயர்திணையை அஃறிணையாகக் கூறுதலும் இவை போல்வன பிறவும்
வழுவமைதியாகக் கொள்க. (59)
 

பொருள்கோளின் பெயரும் தொகையும்
 

411.

யாற்றுநீர் மொழிமாற்று நிரனிறை விற்பூண்
டாப்பிசை யளைமறி பாப்புக் கொண்டுகூட்
டடிமறி மாற்றெனப் பொருள்கோ ளெட்டே.
 
     எ-னின், நால்வகைச் சொற்களானும் செய்யும் செய்யுள் (268) கொள்ளும்
பொருள்கோளின் பெயரும் தொகையும்407 உணர்த்துதல் நுதலிற்று.

     இ-ள்: யாற்றுநீர்ப் பொருள்கோளும் மொழிமாற்றுப் பொருள்கோளும் நிரனிறைப்
பொருள்கோளும் விற்பூட்டுப் பொருள்கோளும் தாப்பிசைப் பொருள்கோளும் அளை-
----------------------------------
     407பொருள்கோள்கள் நான்கு எனத் தொல்காப்பியமும் (எச்ச. 8) ஒன்பது
என நேமிநாதமும் (நூ. 92) கூறும். உரையாசிரியர்கள் (இறை. 56; யா. வி. 95;
வீர. 88, 89) அவற்றின் பெயர் முறை தொகைகளை வெவ்வேறாகக் கூறுவர்.
இதனை மயிலைநாதர் (நன். 410) குறிப்பிடுவார்.