பக்கம் எண் : 486
  

நன்னூல் விருத்தியுரை
 

மொழிமாற்று என்பது தனக்கு உள்ளதைக் கொடுத்துப் பிறர்க்கு உள்ளதை வாங்கும்
பண்டமாற்றுப் போறலின் இரண்டு மொழியும் அவை கொள்ளும் இரண்டு பயனிலையும்
வந்தல்லது மொழிமாற்றுதல் கூடாமையின் அத்தொகை தந்து கூறினாம்.

வ-று:
 
  “சுரையாழ வம்மி மிதப்ப வரையனைய
யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப
கானக நாடன் சுனை” (யா. வி. 59)
 
என வரும். இதனுள் ஆழ என்னும் பயனிலைக்கு இயைந்த அம்மி என்னும்
மொழியினை மிதப்ப என்னும் பயனிலைக்கும் மிதப்ப என்னும் பயனிலைக்கு இயைந்த
சுரை என்னும் மொழியினை ஆழ என்னும் பயனிலைக்குமாக மாற்றிக் கூறியவாறும்
நீத்து என்னும் பயனிலைக்கு இயைந்த முயல் என்னும் மொழியினை நிலை என்னும்
பயனிலைக்கும் நிலை என்னும் பயனிலைக்கு இயைந்த யானை என்னும் மொழியினை
நீத்து என்னும் பயனிலைக்குமாக மாற்றிக் கூறியவாறும் காண்க.
 
  “ஆலத்து மேல குவளை குளத்துள
வாலி னெடிய குரங்கு” (யா. வி. 95)
 
என ஈரடி முதலியவற்றுள் கூறின்410 சேய்மைக் கண்ணவாய் மொழிமாற்று என்பது
தோன்றாமையின் அஃது இலக்கணம் அன்று என விலக்கி, அண்மைக்கண் கூறுவதே
மொழிமாற்று என்பார், ‘ஓர் அடியுள்’ என்றார்.

     “ஆலத்து மேல” (யா. வி. 95) என்பது ஓர் அடியுள் வாராமையின்
கொண்டுகூட்டு என்பாரும்411 உளர். அது மொழிமாற்றிற்கும் கொண்டு கூட்டிற்கும்
வேற்றுமை உணரார் கூற்றாம் என்க. அவர் இச்சூத்திரத்திற்கு மொழிமாற்றோடு
பொருந்தாது கொண்டுகூட்டொடு பொருந்தப் பொருள் கூறிச், “சுரையாழ” (யா. வி. 59)
என்னும் உதாரணம்412 காட்டுவர். (62)
 

நிரனிறைப் பொருள்கோள்
 

414.

பெயரும் வினையுமாஞ் சொல்லையும் பொருளையும்
 
-----------------------------
     410யாப்பருங்கல விருத்தியின் ஆசிரியர் (நூ. 95) ஈரடி முதலியவற்றுள்
மொழிமாற்றுப் பொருள்கோள் கூறுவார்.
     411“ஆலத்து மேல” என்ற பாடலை மயிலைநாதர் (நன். 417) ஈரடிக்
கொண்டுகூட்டு என்பார்.
     412மயிலைநாதர் (நன். 412) இவ்வாறு பொருள் கூறிச், “சுரையாழ”
என்னும் உதாரணத்தைக் காட்டுவார்.