| நன்னூல் விருத்தியுரை |
| அளைமறிபாப்புப் பொருள்கோள் |
| {417} | செய்யு ளிறுதி மொழியிடை முதலினும் எய்திய பொருள்கோ ளளைமறி பாப்பே. |
எ-னின், அளைமறிபாப்புப் பொருள்கோள் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: செய்யுட்கண் ஈற்றில் நின்ற சொல் இடையினும் முதலினும் சென்ற பொருள்கோள் அளைமறிபாப்புப் பொருள்கோளாம் எ-று. வ-று: |
| | “தாழ்ந்த வுணர்வினராய்த் தாளுடைந்து தண்டூன்றித் தளர்வார் தாமுஞ் சூழ்ந்த வினையாக்கை சுடவிளிந்து நாற்கதியிற் சுழல்வார் தாமும் மூழ்ந்த பிணிநலிய முன்செய்த வினையென்றே முனிவார் தாமும் வாழ்ந்த பொழுதினே வானெய்து நெறிமுன்னி முயலா தாரே” (யா. வி. 95*) |
என வரும். இருமருங்கினையும், ‘இறுதி’ என அமையும் ஆதலின், “வாழ்ந்த பொழுதினே வானெய்து நெறிமுன்னி முயலா தாரே” என்னும் சொற்களை அம்மருங்கு வைத்துச் செய்யுள் ஆக்கினும்414 இப்பொருள்கோளாம் என்க. (66) |
| கொண்டுகூட்டுப் பொருள்கோள் |
| 418. | யாப்படி பலவினுங் கோப்புடை மொழிகளை ஏற்புழி யிசைப்பது கொண்டு கூட்டே. |
எ-னின், கொண்டுகூட்டுப் பொருள்கோள் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: செய்யுளடி பலவினும் இயல்பாகிய யாற்றுநீர்ப் பொருளுக்கு ஏலாது கோத்துக் கிடந்த மொழிகளை எடுத்து, அப்பொருளுக்கு ஏற்ற இடத்துக் கூட்டும் பொருள்கோள் கொண்டுகூட்டுப் பொருள்கோளாம் எ-று. ------------------------------- 414ஒன்றற்கு இருமருங்கினையும் மேல் என்ப ஆகலின் சிறப்புப் பெயர் வினையாண்டு வரினும் கொள்க.” என்னும் சங்கர நமச்சிவாயர் உரையைத் (நன். 359) தழுவி அமைந்துள்ள இப்புத்துரைப் பகுதியை யாப்பருங்கல விருத்தியோடும் (நூ. 95) நேமிநாத உரையோடும் (நூ. 62) ஒப்பிடுக. |