| நன்னூல் விருத்தியுரை | பெயர்வினைகள் இடமாக நடக்கும் சொல்லை அங்ஙனம் கூறாது இடைச்சொல் எனப்பட்டது. அங்ஙனம் ஆயின் இடம் என இயற்சொல்லால் கூறாது இடை எனத் திரிசொல்லால் கூறியது என்னை எனின் இயற்சொல்லால் கூறின் இடப்பொருளை உணர்த்தும் சொல் எனப் பொருள்படும் ஆதலின் அதனோடு இதற்கு வேற்றுமை தோன்றற்கு என்க. எண்வகையுள் தோன்றாது ஒழிந்தன வரும் சூத்திரங்களான் உணர்க. வ-று: நம்பியை, நம்பியால், நம்பிக்கு என்புழிப் பெயரின் புறத்துறுப்பாய் ஐயுருபு முதலிய இடைச்சொல் ஒன்று வந்தது. தச்சன், தச்சச்சி, முடியினன் என்புழிப் பெயரின் அகத்துறுப்பாய் விகுதி, இடைநிலை, சாரியை இடைச்சொற்கள் பல வந்தன. வினைக்குறிப்பின் அகத்துறுப்பாய் பல வருவனவும் அன்ன. நடந்தான், நடந்தனன் என்புழித் தெரிநிலைவினையின் அகத்துறுப்பாய் விகுதி, இடைநிலை, சாரியை இடைச்சொற்கள் பல வந்தன. அவன், எவன், ஏனோன், ஏனையோன் எனவும் போல, புரைய எனவும் சாத்தன் என்பான், சாத்தன் ஆயினான் எனவும் இடைச்சொல் அடியாகப் பிறந்த பெயராயும் வினையாயும் வினை இலக்கணையாயும் நிற்றலின் இவற்றின் பகுதி, விகுதி முதலியவும் அன்ன. “அதுமன்” (புறம். 147:9), “அதுமற்றம்ம” (வி. மே.) எனவும், “கொன்னூர்” (குறுந். 138:1), “ஓஒ வுவம னுறழ்வின்றி” (கள. 36:1) எனவும் பெயரின் புறத்துறுப்பாய்ப் பின்னும் முன்னும் ஒன்றும் பலவும் வந்தன. “வருகதில்” (அகம். 276:7), “வருகதில் லம்ம” (அகம். 276:7) எனவும், “ஓஒ தந்தார்” (நன். 419 மயிலை.), “ஏயே யம்பன் மொழிந்தனள் யாயே” (தொல். எச்ச. 15* இளம்.) எனவும் தெரிநிலைவினையின் புறத்துறுப்பாய்ப் பின்னும் முன்னும் ஒன்றும் பலவும் வந்தன. பிறவும் அன்ன. இவற்றுள் சில ஒரோவழி விகாரப்பட்டு மன், கொன் எனற்பாலன மன்னை, கொன்னை என வருவனவும்422 உள. அவை எல்லாம், “புதியன புகுதலும், வழுவல” (நூ. 462) என்பதன்பாற் படுத்துக. (1) | | இடைச்சொற் பொருள்கள் | | 421. | தெரிநிலை தேற்ற மையமுற் றெண்சிறப் பெதிர்மறை யெச்சம் வினாவிழை வொழியிசை பிரிப்புக் கழிவாக்க மின்னன விடைப்பொருள். | எ-னின், மேல், “தத்தம் பொருள” (நூ. 420) என்றார்; அப்பொருளாவன இவை என்பது உணர்த்துதல் நுதலிற்று. ------------------------------- 422இவ்வாறு ஈறு திரிந்து நிற்பனவற்றை, “வருவது என்னாது வந்தொன்றுவது என்றதனால்” மயிலைநாதர் (நன். 419) கொள்வார். | |
|
|