கலைஞருக்கு உள்ள கலைத்திறம் ஆகிய இவை அனைத்தும் ஒரு நல்ல பதிப்பாசிரியருக்கு ஒருங்கே அமைந்திருக்க வேண்டும். இந்தச் செம்பதிப்பை நோக்குவோருக்கு அந்த உண்மை பளிச்சென விளங்கும். நன்னூலுக்கு எடுத்துக்காட்டான வகையில் ஒரு செம்பதிப்பை உருவாக்கி விரிவான ஒரு பதிப்புரையையும் வழங்கிப் பதிப்புத் துறையில் ஒரு சிறந்த பணியை நிறைவேற்றியுள்ள முனைவர் அ. தாமோதரன் நமது பாராட்டுக்கு உரியவர். தமிழுலகம் அவரைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். | சென்னை | பொன். கோதண்டராமன் | அக்டோபர், 1998 | |
|
|