| நன்னூல் விருத்தியுரை | என்பது செவ்வெண். கற்றும் கேட்டும் கற்பனை கடந்தான் என்பது உம்மையெண். உண்ணவென்று உடுக்கவென்று பூசவென்று முடிக்கவென்று வந்தான் என்பது என்றெண். உண்ணவென உடுக்கவெனப் பூசவென முடிக்கவென வந்தான் என்பது எனவெண். உண்ண உடுக்கப் பூச முடிக்கவென்று வந்தான், உண்ண உடுக்கப் பூச முடிக்கவென வந்தான், “நன்னிதி பெறுக நாடொறும் வாழ்கவென் றுன்னுமிவ் வேட்கை யொழிந்தன ரிலரே” (வி. மே.) என்பன என்றும் எனவும் ஒரோவழி நின்றும் பிரிந்தன. பிறவற்றுள்ளும் ஏற்பன வந்தவழிக் காண்க. சாத்தன் வந்தான், கொற்றன் வந்தான் இருவரும் வந்தமையால் கலியாணம் பொலிந்தது என வினைச் செவ்வெண் தொகை பெற்றது என்பாரும்427 உளர். தொகைச்சொல் பெயர் ஆதலின் அறுவகைப் பெயர்களோடு (132, 276) பொருந்தி இருபெயரொட்டு ஆமன்றி வினையோடு பொருந்தாமையானும் இங்ஙனம் இருவர் என்னும் தொகை சாத்தன் கொற்றனாகிய இருவர் எனப் பெயர்த்தொகை ஆதலானும் அது பொருந்தாது என்க. (11) | | தில் இடைச்சொல் | | 431. | விழைவே கால மொழியிசை தில்லே. | எ-னின்428 தில் என்னும் இடைச்சொல் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: இம்மூன்று பொருளையும் தரும் தில் என்னும் இடைச்சொல் எ-று. வ-று: “வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி யரிவையைப் பெறுகதில் லம்ம யானே” (குறுந். 14:2-3) என்பது பெறுதல் வேட்கையை உணர்த்தலின் விழைவு. “பெற்றாங், கறிகதில் லம்மவிவ் வூரே” (குறுந். 14:3-4) என்பது பெற்ற காலத்து அறிக எனக் காலத்தை உணர்த்தலின் ------------------------------- 427இளம்பூரணர் உரையைத் (தொல். இடை. 45) தழுவி வினைச் செவ்வெண் தொகை பெற்றது என்று மயிலைநாதர் (நன். 429) கூறுவார்; நச்சினார்க்கினியரும் இவ்வாறே உரை காண்பார். வைத்தியநாத தேசிகரும் (இல. விள. 262) சங்கர நமச்சிவாயரும் சேனாவரையர் உரையைத் தழுவி இவ்வுரையை மறுப்பர். 428இது தொல்காப்பிய (இடை. 5) நூற்பாவின் திரிபு. | |
|
|