| நன்னூல் விருத்தியுரை | | மா என்னும் இடைச்சொல் | | 439. | மாவென் கிளவி வியங்கோ ளசைச்சொல். | எ-னின்434 மா என்னும் இடைச்சொல் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: மா என்னும் சொல் வியங்கோளின்கண் வரும் அசைச்சொல்லாம் எ-று. வ-று: “மாயக் கடவுட் குயர்கமா வலனே” (தொல். இடை. 25 இளம்.), “உப்பின்று, புற்கை யுண்கமா கொற்கை யோனே” (தொல். உயிர். 35 இளம்.) என வரும். (20) | | முன்னிலை அசைச்சொற்கள் | | 440. | மியாயிக மோமதி யத்தை யித்தை வாழிய மாளவீ யாழமுன் னிலையசை. | எ-னின், மியா முதலிய இடைச்சொற்களின் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: இங்ஙனம் கூறிய பத்து இடைச்சொற்களும் முன்னிலைக்கண் வரும் அசைநிலைகளாம் எ-று. வ-று: | | | “சிலையன் செழுந்தழையன் சென்மியா வென்று மலையகலான் வாடி வரும்” (யா. வி. 2*) | எனவும், “தண்டுறை யூர காணிக வெனவே” (நன். 439* மயிலை.) எனவும், “காமஞ் செப்பாது கண்டது மொழிமோ” (குறுந். 2:2) எனவும், “சென்மதி பெரும” (தொல். இடை. 26 இளம்.) எனவும், “மெல்லியற் குறுமக ளுள்ளிச் செல்வ லத்தை” (புறம். 196:14-15) எனவும், வேய்நரல் விடரக நீயொன்று பாடித்தை” (கலி. 40:10) எனவும், “காணியவா வாழிய மலைச்சாரல்” (நன். 439 மயிலை.) எனவும், “சிறிது தவிர்ந் தீக மாளநின் பரிசில ருய்ம்மார்” (நன். 439 மயிலை.) எனவும், “சென்றீ பெருமநிற் றகைக்குநர் யாரே” (அகம். 46:16*) எனவும், “நீயே, -------------------------------- 434இது தொல்காப்பிய (இடை. 25) நூற்பா. | |
|
|