| நன்னூல் விருத்தியுரை | செய்வினை மருங்கிற் செலவயர்ந் தியாழ” (கலி. 7:5) எனவும் முறையே காண்க.(21) | | எல்லா இடத்தும் வரும் அசைச்சொற்கள் | | 441. | யாகா பிறபிறக் கரோபோ மாதிகுஞ் சின்குரை யோரும் போலு மிருந்திட் டன்றாந் தாந்தான் கின்றுநின் றசைமொழி. | எ-னின், யா முதலிய இடைச்சொற்களின் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: இவ்விருபது இடைச்சொல்லும் முன்னைய போலாது எல்லா இடத்தினும் எல்லாச் சொல்லினும் வரும் அசைச்சொல்லாம் எ-று. விதவாமையின் எல்லா இடத்தினும் எல்லாச் சொல்லினும் வரும் என்பது பெற்றாம். வ-று: “வாழ்கநின் கழலடி மைந்த வென்னவே தோழியா சுவாகதம் போத வீங்கிதென்” (சீவக. 1021:1-2*) எனவும், “அறநிழ லெனக்கொண்டாய் நின்குடை யக்குடைப் புறநிழற் பட்டாளோ விவளிவட் காண்டிகா” (கலி. 99:8-9*) எனவும், “மேயுநிரை முன்னர்க் கோலூன்றி நின்றாயோர் ஆயனை யல்ல பிற” (கலி. 108:11-12) எனவும், “பிறக்கதனுட் செல்லான் பெருந்தவப் பட்டான்” (நன். 440 மயிலை.) எனவும், “நோதக, விருங்குயி லாலு மரோ” (கலி. 33:24-25) எனவும், “எரியி னன்ன செந்தலை யன்றில் பிரியின் வாழா தென்போ (நன். 440 மயிலை.) எனவும், “விளிந்தன்று மாதோ தெளிந்தவெங் கண்ணே” (நற். 178:10*) எனவும், “கண்டிகு மல்லமோ கொண்க” (ஐங். 121:1) எனவும், “ஈங்கா கியவா லென்றிசின்” (நற். 55:12*) எனவும், “அது பெறலருங் குரைத்தே” (புறம். 5:8) எனவும், “அஞ்சுவ தோரு மறனே” (குறள். 366) எனவும், “வடுவென்ற கண்ணாய் வருந்தினை போலும்” (நன். 440 மயிலை.) எனவும், | |
|
|