| நன்னூல் விருத்தியுரை | “ஓராற்றா லென்கண் ணிமைபொருந்த வந்நிலையே கூரார்வேன் மாறனென் கைப்பற்ற - ஓரா நனவென் றெழுந்திருந்தே னல்வினையொன் றில்லேன் கனவு மிழந்தொழிந்த வாறு” (முத்.*) எனவும், “நெஞ்சம் பிளந்திட்டு” (கலி. 101:19) எனவும், “தேவாதி தேவ னவன்சேவடி சேர்து மன்றே” (சீவக. 1:4) எனவும், “பணியுமா மென்றும் பெருமை சிறுமை அணியுமாந் தன்னை வியந்து” (குறள். 978) எனவும் நீர்தாம் எனவும் நீதான் எனவும், “யான்பிற னளியன் வாழ்வா னாசைப்பட்டி ருக்கின் றேன்” (சீவக. 1487:4) என்புழி ஆசைப்பட்டேன் என்பது பொருள் ஆதலின் கின்று என்பது நிகழ்கால இடைநிலை அன்று எனவும், “அழலடைந்த மன்றத் தரந்தயராய் நின்றார் நிழலடைந்தே நின்னையென் றேத்தி” (பு. வெ. 42:1-2*) எனவும் முறையே காண்க. பிறவும் அன்ன. (22) | | | இடையியல் முற்றிற்று. |
|
|