| நன்னூல் விருத்தியுரை | உடலோடு கூடிய உயிரின் தொழிற்குணங்களாம் எ-று. (12) | | உயிர் அல்லாத பொருள்களின் குணம் | | {454} | பல்வகை வடிவிரு நாற்றமை வண்ணம் அறுசுவை யூறெட் டுயிரல் பொருட்குணம். | எ-னின், உயிர் அல்லாத பொருள்களின் குணம் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: வட்டம், இருகோணம், முக்கோணம், சதுரம் முதலிய பல வகை வடிவும்444 நற்கந்தம், துர்க்கந்தம் என்னும் இருநாற்றமும் வெண்மை, செம்மை, கருமை, பொன்மை, பசுமை என்னும் ஐந்து வண்ணமும் கைப்புப், புளிப்புத், துவர்ப்பு, உவர்ப்புக், கார்ப்பு, இனிப்பு என்னும் ஆறு இரதமும் வெம்மை, தண்மை, மென்மை, வன்மை, நொய்மை, சீர்மை, இழுமெனல், சருச்சரை என்னும் எட்டு ஊறும் உயிர் அல்லாத பொருள்களின் குணங்களாம். (13) | | பொருள்களின் தொழிற்பண்பு | | 455. | தோன்றன் மறைதல் வளர்தல் சுருங்கல் நீங்க லடைத னடுங்க லிசைத்தல் ஈத லின்னன விருபொருட் டொழிற்குணம். | எ-னின், உயிரல் பொருட்கே உரிய தொழிற்குணம் அருகிக் கிடத்தலின் அதனை ஒழித்து, அவ்விரு பொருட்கும் பொதுவான தொழிற்குணம் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: தோன்றல் முதலிய ஒன்பதும் இவை போல்வன பிறவும் உயிர்ப்பொருள், உயிரல் பொருள் என்னும் இரண்டற்கும் பொதுவான தொழிற்குணங்களாம் எ-று. வ-று: உயிர் தோன்றி மறைந்தது, உடல் தோன்றி மறைந்தது, நெருப்புத் தோன்றி மறைந்தது என இத்தொடக்கத்தன எல்லாம் இருபொருட்கும் பொதுவாகிய தொழிற்குணம் ஆதல் காண்க. (14) | | உயிர் அல்லாத பொருள்களின் குணம் | | {456} | சால வுறுதவ நனிகூர் கழிமிகல். | எ-னின், “பல்வகைப் பண்பு” (நூ. 442) என்றார்; அவை இவை என இதுகாறும் உணர்த்தி, அப்பண்புகளுள் ஒரு குணம், பல குணம் தழுவி வரும் என்னும் உரிச்- -------------------------------- 444வடிவாவது கட்புலனாகியே நிற்கும். அது வட்டம், சதுரம் முதலிய முப்பத்திரண்டனுள் ஒன்று.” என்று நச்சினார்க்கினியர் (தொல். சிற. பாயி.) கூறுவார். | |
|
|