பக்கம் எண் : 518
  

நன்னூல் விருத்தியுரை
 

சொற்கள் இவை என உணர்த்துவான் தொடங்கி, அவற்றுள் ஒரு குணம் தழுவிய உரிச்சொல்லுள் சில உணர்த்துதல் நுதலிற்று.

     இ-ள்: சால என்பது முதல் கழி என்பது ஈறாகக் கூறிய ஆறு உரிச்சொல்லும்
மிகுதியாகிய ஒரு குணத்தை உணர்த்தும் சொற்களாம் எ-று.

     வ-று: “பருவந்து சாலப் பலர்கொலென் றெண்ணி” (வளையாபதி. 45:1), “உறுவளி
தூக்கு முயர்சினை மாவின்” (கலி. 84:1*), “தவச்சேய் நாட்டா ராயினும்” (நற். 115:8),
“நனிபே தையே நயனில் கூற்றம்” (புறம். 227:1), “பொறைநில்லா நோய்கூரப் புல்லென்ற
நுதலிவள்” (கலி. 3:4*), “சினனே காமங் கழிகண் ணோட்டம்” (பதிற். 22:1) என
முறையே காண்க. இவற்றுள் சால என்பது சால் என்னும் உரிப்பெயர் அடியாகப் பிறந்த
வினையெச்சக் குறிப்பு. சாலப் பல ஆம் என445 ஆம் என்னும் வினைப் பயனிலை
தொக்கு நின்றது.

     இப்பண்படிகளை நோக்கிப், “பல்வகைப் பண்பும் பகர்பெய ராகி” (நூ. 442)
என்றார்.

     சால் எனப் பண்படியாகச் சூத்திரம் செய்யாது சால என வினையெச்சக் குறிப்பாகச்
சூத்திரம் செய்தல் அவ்வுரிப்பெயர் அடியாக வினை விகற்பங்கள் எல்லாம் பிறக்கும்
என்பது தோன்ற உடம்பொடு புணர்த்தலாம் என்க. அவை எல்லாம் வந்தவழிக்
காண்க.(15)
 

பல குணம் தழுவி வரும் உரிச்சொல்
 

457.

கடியென் கிளவி காப்பே கூர்மை
விரையே விளக்க மச்சஞ் சிறப்பே
விரைவே மிகுதி புதுமை யார்த்தல்
வரைவே மன்றல் கரிப்பி னாகும்.

     எ-னின், பல குணம் தழுவிய உரிச்சொல்லுள் ஒன்று உணர்த்துதல் நுதலிற்று.

     இ-ள்: கடி என்னும் உரிச்சொல் காப்பு முதலிய பதின்மூன்று குணத்தையும்
உணர்த்தும் எ-று.

     வ-று: “ஒண்சுடர் நல்லி லருங்கடி நீவி” (அகம். 7:8*) என்பது காப்பு. “கடிநுனைப்
பகழி” (நன். 456* மயிலை.) என்பது கூர்மை. “கடிமாலை சூடி” (சீவக. 1574:1) என்பது
நாற்றம். “கண்ணாடி யன்ன கடிமார்பன்” (சீவக. 2327:1) என்பது விளக்கம். “கடியர
--------------------------------
     445 இந்த உரைக்குறிப்பு தெளிவாக அமையவில்லை.